485 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்! - அமேசான் மீது வழக்குத் தொடுத்த இயக்குநர் | Woody Allen sues Amazon over cancelled film contract

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (09/02/2019)

கடைசி தொடர்பு:10:26 (09/02/2019)

485 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்! - அமேசான் மீது வழக்குத் தொடுத்த இயக்குநர்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் நடிகர் உட்டி ஆலன், அமேசான் ஸ்டுடியோஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமேஸான்

`ப்ளூ ஜாஸ்மின்', `மிட்நைட் இன் பாரிஸ்' , `டு ரோம் வித் லவ்'  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் உட்டி ஆலன். 2016-ம் ஆண்டு ஆலன் இயக்கிய `கஃபே சொசைட்டி' படத்தை வாங்கிய அமேசான் ஸ்டுடியோஸ் நிறுவனம். 2017-ல் மீண்டும் ஒரு படம் தயாரித்துத் தர ஆலனை ஒப்பந்தம் செய்தது. அதைத் தொடர்ந்து நான்கு படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது. இதற்கான வேலைகளை ஆலனின் தயாரிப்புக் குழு மும்முரமாய் நகர்த்தியது. இதனிடையே 20 ஆண்டுகள் பழைய குற்றச்சாட்டுகளைக் கணக்குக்காட்டி உட்டி ஆலனிடம் போட்ட நான்கு படத்துக்கான ஒப்பந்தத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், அவரது முந்தைய 2 படங்களையும் வெளியிடாமல் வைத்துள்ளது.  

உட்டி ஆலன்

இந்த விவகாரத்தில் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அமேசான் அதிகாரிகள் பணிய மறுக்கவே, நீதிமன்றத்தை நாடியுள்ள உட்டி தரப்பு  `எந்தக் காரணமும் இன்றி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது அமேசான்" என்று கூறியுள்ளது.

அமேசான் உடனேயே  25 வருஷத்துக்கு முன்னாடினு ஃப்ளாஷ்பேக் சுத்த, ``இந்த விவகாரம் ஒப்பந்தம் போடும்போதும் அமேசானுக்குத் தெரிந்ததே'' என்று கூறி, இந்த நஷ்டத்தை ஈடுகட்ட 68 மில்லியன் டாலர்கள் தர வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 485 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.