பாலாவுக்கு பதில் கௌதம் மேனன் கதாநாயகியாக ஜான்வி கபூர்? - மகனுக்காக விக்ரமின் அடுத்த பிளான் | GVM to direct Dhruv's varma , sridevi's daughter janvi kapoor to be introduced in tamil?

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (09/02/2019)

கடைசி தொடர்பு:10:21 (09/02/2019)

பாலாவுக்கு பதில் கௌதம் மேனன் கதாநாயகியாக ஜான்வி கபூர்? - மகனுக்காக விக்ரமின் அடுத்த பிளான்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த படம் `வர்மா’. இந்தப் படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

துருவ்

தனக்குச் சேது தந்தது போல், துருவின் சினிமா பிரவேசத்துக்கும் பாலா பிள்ளையார் சுழி போடவேண்டும் என எண்ணியதாக விக்ரமே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். கடந்த மாதம் 9-ம்தேதி `வர்மா' டிரெய்லர் ரிலீசானது. துருவின் நடிப்பில் படத்தைப் பார்க்க எதிர்பார்த்திருந்த நிலையில், அது கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தவர் இயக்குநர் பாலா. விக்ரமும், பாலாவும் நெருங்கிய குடும்ப நண்பர்கள்.

வர்மா 

ஒரு ரீமேக்கை பாலா போன்ற இயக்குநர் எடுப்பதற்கு காரணம் விக்ரமிடம் இருந்த நட்பாகத்தான் இருக்கும். படக்குழுவுக்கு நெருங்கியவர் நம்மிடம் பேசும்போது, `படத்தின்  ஒவ்வொரு படியிலும் இயக்குநர் பாலாவுக்கான பிடி தளர்ந்ததாகவும், அவரது முடிவுகளுக்கு எதிர்மறையான விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மகனின் அறிமுகத்தில் ஆர்வம் காட்டிய விக்ரம், படத்தைப் பார்த்த பின்பு  அதை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிகிறது. அதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்படும் ரூபாய் 5 கோடி நஷ்டத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்த செய்திக்குறிப்பில் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்திருந்தது. ஆனால் விக்ரமுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. 

கௌதம் மேனன்

இந்நிலையில் பாலாவின் இடத்தை வேறு யாருக்குக் கொடுக்கலாம் என்ற பேச்சு வார்த்தையில் தற்போது `எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருக்கும் கௌதம் மேனன் முதல் சாய்ஸாகவும், பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், டேவிட், சோலோ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் ஆகியோரும் லிஸ்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

``அநேகமாக கௌதம் மேனன் இயக்குவதற்கு ஆர்வம் காட்டவில்லையென்றாலும் `யெஸ்' சொல்ல நிறைய காரணங்களும் இருக்கின்றன. விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணன்' பட ஷுட்டிங்கில் இருக்கிறார். அதன் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் இயக்குநர் மணிரத்னம் எடுக்கும் `பொன்னியின் செல்வன்' படத்துக்கு 6-7 மாதங்கள் தேதி கொடுத்திருக்கிறார். இதனிடையில் கௌதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் `துருவ நட்சத்திரம்' படத்துக்கும் இன்னும் விக்ரம் நடித்து கொடுக்கவேண்டிய காட்சிகள் இருப்பதாகவும் அதைக் காரணம் காட்டி இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே இயக்கினால் நல்லா இருக்கும் என விக்ரம் கூறியுள்ளதாகவும் கதாநாயகியாக ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வைக்கத் திட்டமிட்டு வருகின்றனர். இதில் எந்த இயக்குநர் படத்தை இயக்கினாலும் படம் ஜுனில் வெளி வருவது மிகவும் கடினமான விஷயமாகத் தெரிகிறது" என்றும் கூறினார்.