வீட்டுல செல்லப் பிராணி இருக்கா அப்ப இதைப் பார்க்காதீங்க - பெட் செமட்ரி டிரைலர் | pet sematry trailer released film to be out in april

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (09/02/2019)

கடைசி தொடர்பு:10:50 (09/02/2019)

வீட்டுல செல்லப் பிராணி இருக்கா அப்ப இதைப் பார்க்காதீங்க - பெட் செமட்ரி டிரைலர்

 ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் எழுதிய ஃபேன்டசி ஹாரர் நாவல் `பெட் செமட்ரி' (pet sematary). 1986-ல் வெளிவந்த இந்தப் புத்தகத்தைத் தழுவி அதே பெயரில் 1989-ம் ஆண்டு படமாக்கியது பாராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம்.

பெட் செமட்ரி

30 வருடம் கழித்து அப்படத்தை அதே பெயரில் ரீமேட் செய்திருக்கிறது பாராமவுன்ட் பிக்சர்ஸ். மைன் யுனிவர்சிடியில் வேலை கிடைக்கும் டாக்டர் லூயிஸ் கிரீட் ஒரு பெரிய பங்களாவைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டுக்கு அருகே இருக்கும் செல்ல பிராணிகளுக்கான மயான பூமி, இறந்தவர் உயிர்ப்பிக்கும் சக்தியுடையதாய் இருக்கிறது. விபத்தில் இறந்த தன் மகளை அந்த மையானத்தில் உயிர்ப்பிக்கும் டாக்டருக்கு, அதன்பின் தொடரும் அதிர்ச்சி திருப்பங்கள்தாம் கதை. இப்படத்தில் ஜெசன் கிளார்க், அமி சீமெட்சஸ், ஜான் லித்கோ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.