`தளபதி படத்துக்குப் பின்னர் ரஜினியுடன் இணைகிறேன்!’ - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் | santosh sivan - rajini combo is back

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (11/02/2019)

`தளபதி படத்துக்குப் பின்னர் ரஜினியுடன் இணைகிறேன்!’ - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

தளபதி படத்துக்குப் பின்னர் தற்போது ரஜினியுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.

சந்தோஷ் சிவன்

இந்திய சினிமாவில் ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் சிவன். பல முக்கியமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு செய்வது மட்டுமின்றி சில திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தமிழில் மணிரத்னம் இயக்கிய தளபதி, ராவணன் உள்ளிட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ``தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் பணிபுரிகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார். 

சந்தோஷ் சிவனின் ட்விட்டர் பதிவு

`பேட்ட’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி , ஸ்பைடர் படங்களுக்கும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளதால், அவர் குறிப்பிடுவது முருகதாஸ் இயக்கும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.