ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அதர்வா! | r.kannan directs again actor atharva after boomerang

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (11/02/2019)

கடைசி தொடர்பு:12:15 (11/02/2019)

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அதர்வா!

`இவன் தந்திரன்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவான படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தனது  'மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்தார் இயக்குநர் ஆர். கண்ணன். இந்தப் படம் வரும் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அதர்வா

இதைத் தொடர்ந்து, மீண்டும் அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் கண்ணன். அந்தப் படத்தையும் தானே தயாரிக்க உள்ளார். சமுத்திரக்கனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.`பூமராங்' படத்துக்கு இசையமைத்த ரதன் தான் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளர். ஆக்‌ஷன் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ஹீரோயின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய விவரத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தற்போது, அதர்வா ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகும் 'குருதி ஆட்டம்' படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close