சௌந்தர்யா-விசாகன் திருமணம்; நேரில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள் | rajini's daughter soundarya - vishagan's marriage function all top political leaders joined

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (11/02/2019)

கடைசி தொடர்பு:12:43 (11/02/2019)

சௌந்தர்யா-விசாகன் திருமணம்; நேரில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விசாகன்  திருமண விழாவில் தமிழக அரசியலின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 சௌந்தர்யா - விசாகன்

ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஸ்டாலின், கமல்ஹாசன், மு.க.அழகிரி, சைதை துரைசாமி, வைகோ, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, சி.வி.சண்முகம்,

ரஜினி - கமல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, ஏவி.எம். சரவணன், நக்கீரன் கோபால், பி.வாசு, செல்வராகவன், கலைப்புலி எஸ்.தாணு, மணிரத்னம், சுஹாசினி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தமிழருவி மணியன், வைரமுத்து, மதன் கார்க்கி, அதிதிராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், எஸ்.பி.முத்துராமன், தயாநிதி அழகிரி, துஷ்யந்த் ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், லதா சேதுபதி, குட்டி பத்மினி, பழனி பெரியசாமி, பரந்தாமன் தாணு, கஜராஜ், நடிகர் மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, லட்சுமி மஞ்சு, ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க, ம.தி.மு.க என தமிழகத்தின் அரசியல்களமே ரஜினிக்காக வந்தது எனப் பல அரசியல் அம்சங்கள் நிறைந்த முக்கிய நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.