ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்? - காரணம் சொல்லும் புதுமுக இயக்குநர் | Ritika sigh's next movie update

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (11/02/2019)

கடைசி தொடர்பு:13:14 (11/02/2019)

ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்? - காரணம் சொல்லும் புதுமுக இயக்குநர்

`இறுதிச் சுற்று' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். அதைத் தொடர்ந்து `ஆண்டவன் கட்டளை', `சிவலிங்கா' போன்ற படங்களில் நடித்து வந்த ரித்திகா, தற்போது அறிமுக இயக்குநர் விவேக் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க இருக்கிறார். 

ரித்திகா சிங்

தன்னுடைய அறிமுக படமான 'இறுதிச் சுற்று' மூலம் அதிக கவனம் ஈர்த்தவர், ரித்திகா சிங். இவர் ஓர் மார்ஷியல் ஆர்டிஸ்ட் என்பதால் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து, அடித்து துவம்சம் செய்திருப்பார். அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் `ஆண்டவன் கட்டளை', லாரன்ஸுடன் `சிவலிங்கா' போன்ற படங்களில் நடித்தார். பாலாவிடம் துணை இயக்குநராக இருந்த விவேக், தற்போது அருண் விஜய்யை வைத்து புதிதாக படம் இயக்க இருக்கிறார். அந்தப் படத்தின் கதாநாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார். ``குத்துச் சண்டையை மையமாக எடுக்கப்படும் என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்காக இவரை தேர்ந்தெடுத்துள்ளேன்'' என்று விவேக் கூறினார்..

மேலும், ``இந்தப் படத்தில் ரித்திகாவுக்கு சாதாரண ஹீரோயின் ரோல் இல்லை. இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். படத்தில் ரித்திகா ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டராக நடிப்பார். இந்தப் படத்துக்கு இவர் ஒப்பந்தமான பின், அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பில் மேலும் அழகு சேர்த்துள்ளேன். ஒரு பத்திரிகையாளர் என்னென்ன கஷ்டங்களை சந்திப்பார் என முழுவதுமாக இதுவரை சொல்லவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இவர் ஏற்று நடிக்கும் மீரா கதாபாத்திரம் பத்திரிகையாளர் சந்திக்கும் அனைத்து சிரமங்களையும் சொல்லும் படமாக இருக்கும்'' என்றும் கூறினார். படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களுக்குப் பின் ஆரம்பிக்க இருக்கிறது.