`பாக்ஸர்' அறிவிப்பு கணவர் தந்த திருமண நாள் பரிசு! - தொகுப்பாளினி ஆர்த்தி | anchor arthy talks about her husband's movie 'boxer' announcement

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (11/02/2019)

கடைசி தொடர்பு:13:40 (11/02/2019)

`பாக்ஸர்' அறிவிப்பு கணவர் தந்த திருமண நாள் பரிசு! - தொகுப்பாளினி ஆர்த்தி

மக்கள் டிவி ஆர்த்தியை நினைவிருக்கிறதா? 'தமிழ் தொகுப்பாளினி' என அறியப்பட்டவர், இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த விவேக்கை திருமணம் செய்த பின், சின்னத்திரைக்கு பிரேக் விட்டார். தொடர்ந்து மகன் பிறக்க, தற்போது முழுநேரமும் அம்மாவாக பையனுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

ஆர்த்தி

இவரின் கணவர் விவேக், நடிகை த்ரிஷாவை லீட் ரோலில் கமிட் செய்து தொடங்கிய படம் சில பிரச்னைகளால் தள்ளிப் போயிருக்கிற நிலையில், தற்போது அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் 'பாக்ஸர்' எனும் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநராக கணவர் அறிமுகமாக இருப்பது குறித்துக் கேட்டதும்,``சந்தோஷமா இருக்கு. உதவி இயக்குநர்ங்கிற இடத்துல இருந்து இயக்குநர்ங்கிற படியில ஏறுகிற காலகட்டம் ரொம்பவே முக்கியமான தருணம். தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின்னு எல்லா விஷயங்களும் கைகூடி, இப்படியொரு அறிவிப்பு வெளிவராதான்னு ஏங்கிட்டிருக்கிற உதவி இயக்குநர்களோட தவிப்பை மத்தவங்களால முழுசா உணர முடியாது. இன்னைக்கு எங்க திருமண நாள். கணவருக்கு அமைஞ்ச இந்த வாய்ப்பை, அவர் எனக்குத் தர்ற திருமண நாள் பரிசாவே நினைக்கிறேன். அதுவும் நான் விரும்பின, எதிர்பார்த்த பரிசு'' என்கிறார்.