`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்! | KGF chapter 2 will starts on april

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (11/02/2019)

`கே.ஜி.எஃப் 2'வின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம், `கே.ஜி.எஃப்'. இந்தப் படத்தின் முதல் அத்தியாயம் கடந்த ஆண்டு வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த யாஷுக்கு அவரது ரசிகர்கள் ஹெலிகாப்டரில் பால் அபிஷேகம்கூட செய்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.

 யாஷ் - கே ஜி எஃப்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியான படம் `கே.ஜி.எஃப்'. கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை, பிரஷாந்த் நீல் இயக்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், முழுக்க முழுக்க 'ராக்கி' கதாப்பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. கடந்த வாரம் அமேசான் ப்ரைமிலும் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் கன்டென்ட்டும் இந்தப் படம்தான். இதன் முதல் அத்தியாயம் கருடனைக் கொன்றதோடு முடியும்.

இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கியமான சில கதைகள் சொல்லப்பட இருக்கின்றன. சஞ்சய் தத் இதன் இரண்டாம் அத்தியாயத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் யாஷுடைய பகுதியை ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக, சிறப்பான தரமான சம்பவத்தை 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்.