`வாழ்க்கையே அதிசயம் தான் என்பதை உணர மறுக்கிறோம்!' - அலாவுதீனின் அற்புத கேமரா டிரெய்லர் | Trailer of Alaudhinin Arputha Camera

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (11/02/2019)

கடைசி தொடர்பு:13:58 (12/02/2019)

`வாழ்க்கையே அதிசயம் தான் என்பதை உணர மறுக்கிறோம்!' - அலாவுதீனின் அற்புத கேமரா டிரெய்லர்

`மூடர் கூடம்' நவின் இயக்கும் அடுத்த படம் `அலாவுதீனின் அற்புத கேமரா.' பல்வேறு நாடுகளில் படமாகப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (11.02.2019) வெளியானது. 

நவீன்

ஆனந்த விகடனுக்காகப் பேட்டி எடுத்த சமயத்தில், `` `மூடர்கூடம்’ ஒரு வீட்டுல நடக்குற கதைனா இந்தப் படம் வெவ்வேறு நாடுகள்ல டிராவல் ஆகுற படம். அதுல ஆக்‌ஷன் கம்மி. இதுல ஆக்‌ஷன் அதிகம். ஸ்விஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலினு ஏழு ஐரோப்பிய நாடுகள்ல ஷூட் பண்ணியிருக்கோம். கயல் ஆனந்தி தவிர தயாரிப்பாளர் நந்தகோபால் இந்தப் படத்துல வில்லனா நடிச்சிருக்கார். இது ஒரு ஃபேன்டஸி படம். இதுல நான்தான் அலாவுதீன். அலாவுதீன் கையில ஒரு விளக்கு கிடைக்கிறதுக்குப் பதிலா ஒரு கேமரா கிடைச்சா எப்படியிருக்கும்ங்கிறதுதான் கதை’’ என்று படத்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக நடராஜன் சங்கரன் என்பவரும் ஒளிப்பதிவாளராக கே.ஏ.பாட்ஷா என்பவரும் வேலை செய்திருக்கிறார்கள். படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.