`பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு, அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அவர் `சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேரக்டருக்காக உடல் இளைக்க, பல சிகிச்சைகளையும் துபாயில் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாயின.
எனினும், அதிகபடியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் அந்தப் படத்திலிருந்து அவரே விலகினார் எனக் கூறப்பட்டது. இதற்கு சிகிச்சைக்கள் பலனளிக்காததும் ஒரு விஷயம் எனத் தெரிவித்தனர். இவை ஏதும் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்கு முன்னரே வேறொரு பாலிவுட் கதாநாயகி படத்தில் ஒப்பந்தமும் செய்யப்பட்டார். படமும் முடியும் தருவாயில் உள்ளது. அனுஷ்காவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருந்தபோதும். தனக்கு அதிகபடியாக வந்த பேய் படங்களைத் தவிர்த்து வந்தார் அனுஷ்கா. மேலும், பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதைத் தவித்து வந்தார். தற்போது, மாதவனுடன் இணைந்து 'சைலன்ட்' என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, அனுஷ்காவின் புகைப்படங்கள் தற்போது ட்விட்டரை கலக்கி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்புகைப்படங்களை க்ளிக்கியுள்ளார். இதுகுறித்து மேலும் விசாரிக்கையில் டையடீஷியன் லூக் கொட்டினோ, தனது உணவியல் மற்றும் லஃப்ஸ்டைல் சம்பந்தமாக வெளிவரும் அடுத்த புத்தகத்துக்காக இந்தப் போட்டோஷூட் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புகைபடங்களைப் பதிவிட்ட கொட்டினோ பதிவிட்டிருட்டிருக்கிறார்
We have something coming up real soon ....our vision is to change the health of the country , encourage investment in prevention and use lifestyle as the new religion and the magic drug ....we aim to put the word “care” back into “ healthcare “ pic.twitter.com/asyNsoV9ZO
— Luke Coutinho (@LukeCoutinho17) February 11, 2019
