வெளியானது 'விஸ்வாசம்' படத்தின் மேக்கிங் வீடியோ! | viswasam making video released

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (11/02/2019)

வெளியானது 'விஸ்வாசம்' படத்தின் மேக்கிங் வீடியோ!

'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா - அஜித் காம்போவில் உருவான படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். தவிர, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

விஸ்வாசம்

ஜனவரி 10-ம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து இன்னும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிராமத்துப் பின்னணியில் உருவான இப்படத்தின் உருக்கமான க்ளைமாக்ஸ் காட்சிகள் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், 'விஸ்வாசம்' படத்தின் டிரெய்லர், பாடல்கள் ஆகியவை இணையத்தில் கலக்கி கொண்டிருக்கையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களைக் கடந்துள்ளது.  

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க