முடிந்தது `மாமனிதன்' ஷூட்டிங்; விரைவில் இளையராஜா - யுவன் இசை! | Shooting has been wrapped for Mamanithan

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (12/02/2019)

கடைசி தொடர்பு:14:45 (12/02/2019)

முடிந்தது `மாமனிதன்' ஷூட்டிங்; விரைவில் இளையராஜா - யுவன் இசை!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம், `மாமனிதன்'. இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரை, தேனி, கேரளா போன்ற பல்வேறு இடங்களில் நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துவிட்டது. இதை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

மாமனிதன்

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கும் படம் `மாமனிதன்'. இந்த இருவரது இசையில் வெளியாக இருக்கும் இப்படத்தில் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் நடித்த காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் `ஜோக்கர்' படப் புகழ் குரு சோமசுந்தரம், `விஸ்வாசம்' படப் புகழ் அனாமிகோ போன்றவர்களும் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.  படம் சம்பந்தமாக சீனு ராமசாமி பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், ``படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. எல்லாப் புகழும் என்னுடைய படக்குழுவையே சாரும். படத்தின் காட்சியமைப்புகளுக்கு இசைஞானி - யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையைக்  கேட்க ரொம்ப ஆர்வமாக உள்ளேன். படத்திற்கான டப்பிங் வேலைகள் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது" என்று கூறியுள்ளார். சீனு ராமசாமி - யுவன் காம்போ நான்காவது முறையாக நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் `இடம் பொருள் ஏவல்', `தர்மதுரை', `கண்ணே கலைமானே' படத்தில் இணைந்து வேலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.