இந்த வருஷம் காதலர் தினத்துக்கும் அனிருத் சிங்கிள்தான்! #jersey | Anirudh's single to be released on Valentine's day

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (12/02/2019)

கடைசி தொடர்பு:14:39 (12/02/2019)

இந்த வருஷம் காதலர் தினத்துக்கும் அனிருத் சிங்கிள்தான்! #jersey

பிப்ரவரி 14 காதலர் தினம் காதலிப்பவர்களுக்கு ஸ்பெஷல்னா, காதலிக்காதவர்களுக்கும் ஸ்பெஷல் ஆக்கியவர் அனிருத். ஆமாம், 2015 ம் ஆண்டு காதலர் தினத்திலிருந்து கடந்த 3 வருடங்களாக ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் ஒரு சிங்கிள் டிராக் வெளியிடுவார்.

anirudh

அந்தவகையில் 2015ம் ஆண்டு `ஆக்கோ' படத்தில் `எனக்கென யாரும் இல்லையே' 2016ம் ஆண்டு `அவளுக்கென' 2017ம் ஆண்டு `ஒண்ணுமே ஆகல' 2018ல் `ஜுலி' உள்ளிட்ட பாடல்களை தந்து காதலர் தினத்தை தனக்கானதாக மாற்றியவர் இசையமைப்பாளர் அனிருத். இந்தப் பாடல்களில் மேலும் இரு சிறப்பம்சம் என்னவென்றால் எல்லாப் பாடல்களுக்கும் வரிகள் எழுதியது விக்னேஷ் சிவன்தான்.

விக்னேஷ் சிவன் - அனிருத்

இந்த வருஷம் அனி-விக்னேஷ் சிவன் யூத்-ஃபுல் காம்ப்போவின் காதலர் தின ட்ரீட் என்னவென்று இன்னும் ஒரு தகவலும் வரவில்லை என ரசிகர்கள் காத்திருந்த வேளையில், நானி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருக்கும் `ஜெர்சி' படத்தின் சிங்கிள் டிராக் `மறக்கவில்லையே' வெளியாகவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ் என இரு மொழியிலும் வெளிவரவுள்ள இப்பாடலின் தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன்தான் எழுதியுள்ளார். இந்த வருடமும் காதலர் தினத்துக்கு அனிருத்- விக்னேஷ் சிவன் சிங்கிள் பாடல்தான். இதில் அனிருத் மட்டும் சிங்கிள்தான்.

ஜெர்ஸி