`விஜய்சேதுபதி அப்படி சொன்னதும் கிருத்திகாவுக்கு அவ்வளவு சந்தோஷம்!'- நெகிழும் தாயார் | 'you know how i call vijay sethupathi uncle'' says mounaraagam kruthika

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (12/02/2019)

கடைசி தொடர்பு:14:25 (12/02/2019)

`விஜய்சேதுபதி அப்படி சொன்னதும் கிருத்திகாவுக்கு அவ்வளவு சந்தோஷம்!'- நெகிழும் தாயார்

விஜய்சேதுபதி

"'நீ கொடுத்த காபி கப்பில்தான் தினமும் காபி குடிக்கிறேன் தெரியுமா?'னு கிருத்திகாகிட்ட சொல்லியிருக்கிறார் விஜய்சேதுபதி. இத்தனைக்கும் அந்தப் பரிசை கிருத்திகா கொடுத்து பல மாசாயிருந்தாலும், அதை ஞாபகம் வெச்சிருந்ததும் அதைப் பயன்படுத்துவதாகச் சொன்னதைக் கேட்டு கிருத்திகா செம ஹேப்பி" என்று இதைச் சொல்லும்போதே கிருத்திகாவின் அம்மா லட்சுமி பிரியாவின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெளன ராகம் சீரியலில், ஷக்தியாகவும் ஸ்ருதியாக நடித்து, பலரால் பாராட்டுகளைப் பெற்றுவருபவர் கிருத்திகா. அவரின் இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்அப் எல்லாவற்றிலும் விஜய்சேதுபதியே ஆக்கிரமித்திருந்தார். அது குறித்து அவரின் அம்மாவிடம் பேசினேன். 

விஜய்சேதுபதி

"கிருத்திகாவுக்கு விஜய்சேதுபதியை அவ்ளோ பிடிக்கும். கொஞ்ச நாளுக்கு முன்பு, சூப்பர் டீலக்ஸில் லேடி கெட்டப்பில் அவரோடு வீடியோ வந்துச்சு இல்லையா. அதையே கிருத்திகா, டிக்டாக்கில் நடிச்சிருந்தா. அதை, அவரோட பக்கத்தில் ஷேர் பண்ணி வாழ்த்தியிருந்தார். ஒருநாள், டப்பிங் ஸ்டூடியோவில், அவரைப் பார்த்தோம். ஆனா, பேசுவதற்கு டைம் கிடைக்கல. அதனால, அவருக்குக் கொடுக்க எடுத்து வந்த கிஃப்ட்டை கொடுத்தோம். அதில் ஒரு போட்டோ ஃபிரேமும், காபி மக்கையும் வைச்சிருந்தோம். மெளனராகம் சீரியலில் இவளுக்குப் பெரியம்மாவாக நடிக்கும் தமிழ்ச்செல்வி மூலமா, அவர் சூட்டிங்கின்போது, வரச் சொல்லியிருந்தார். அங்கே போனப்பதான், அரை மணிநேரம் பேச டைம் கிடைச்சுது. அப்போதான், கிருத்திகா கொடுத்த கிஃப்டை ஞாபகம் வெச்சிருந்து சொன்னார். இவ, கொடுத்த போட்டோ ஃப்ரேமை ஆபிஸில் மாட்டி வெச்சிருக்கிறாராம். கிருத்திகாவுக்கு நிறைய சாக்லேட் கொடுத்தார்.

'என்னை எல்லோருமே  VJS னுதான் பலரும் கூப்பிடுவாங்க. நீ மட்டும்தான்  VSPனு கூப்பிடுற. சின்னத்திரையில சூப்பரா நடிக்கிற, பெரிய ஸ்கிரினுக்கும் சீக்கிரமா நாமகூட சேர்ந்து படத்துல நடிக்கலாம். முதல்ல சைல்ட் ஆர்ட்டிகிஸ்டா நடிச்சிட்டு, அப்பறம் படிச்சிட்டு வந்து ரீ எண்ட்ரி கொடு' என்று சொன்னதும் கிருத்திகாவுக்கு அவ்வளவு சந்தோஷம். 'அம்மா, அம்மாவை எப்போதும் நல்லா பாத்துக்கணும்' என்று அவளிடம் சொல்லிட்டு, என்னிடம், "சீரியல் நடிப்பது எல்லாம் ஓகே. ஆனாலும் குழந்தைங்க குழந்தைகளாகவும் இருக்கணும். அதை நீங்கதான் பார்த்துக்கணும்' என்றார். விஜய்சேதுபதியை படங்கள்ல பார்த்ததை விடவும் நேரில் பார்த்ததும் எங்களுக்கு இன்னும் ரொம்ப பிடிச்சிடுச்சு" என்கிறார் லட்சுமி பிரியா.