வீட்டு உரிமையாளர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்த சீரியல் நடிகர்! | Serial actor birla bose files compliant against house owner in commissioner office

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (12/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (12/02/2019)

வீட்டு உரிமையாளர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்த சீரியல் நடிகர்!

கே.பாலசந்தரால் சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, 'கோலங்கள்', 'திருமதி செல்வம்' உள்ளிட்ட தொடர்கள் மற்றும் 'தனி ஒருவன்', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் நடிகர் பிர்லா போஸ். சமீபமாக நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நிரோஷா தலைமையிலான அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் தன் வீட்டு உரிமையாளர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார்.  

நடிகர் பிர்லா போஸ்

அந்தப் புகார் மனுவில், ``நான் மதுரவாயல் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்து இந்த வீடு ஜப்தியில் உள்ளது. உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை. இவரிடம் கேட்டால் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. உண்மையில் இந்த வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் என்று தெரிய வந்தபோதுதான் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்று தெரியவந்தது.

வீடு 920 சதுர அடி என்று கணக்கு காட்டி வங்கியில் லோன் வாங்கியிருக்கிறார்கள். அதற்கு வங்கியும் லோன் கொடுத்துள்ளது. ஆனால், உண்மையில் இந்த வீடு 500 சதுர அடிதான். இந்த பிரச்னை குறித்து ஆரம்பத்திலேயே நான் புகார் கொடுத்துள்ளேன். ஜெயலலிதா அம்மா இருந்தபோது சி.எம் செல்லுக்கும் மனு அனுப்பியுள்ளேன். இப்போது, பிப்ரவரி18-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

என்னை ஏமாற்றிய பாலாஜி, ஆறுமுகம் மற்றும் அந்த வங்கி மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் என் குடும்பத்துக்கும் வீட்டுக்கும் எந்தவித தொந்தரவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து நியாயத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக, 25.01.2016 அன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க