Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

குவன்டின் டொரன்ட்டினோவின்  ‘once upon a time in hollywood’ படத்தின் டிரெய்லர்தான் இப்போது உலக வைரல். டிரெய்லரில் பிராட் பிட்டும், புரூஸ்லியும் அடித்துக்கொள்வதாகக் காட்சிகள் இடம்பெற, ஹார்ட்டின்கள் பறக்கின்றன. படத்தின் நட்சத்திரப் பட்டாளத்துடன் டொரன்ட்டினோவின் ஆதர்ச நடிகை உமா துர்மனின் 20 வயது மகள் மாயா ஹாவ்க்கும் நடித்துள்ளார். ஜூலைக்காகக் காத்திருக்கிறது குவன்டின் ரசிகர் படை. வீ ஆர் வெயிட்டிங்!

2008-ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது, ‘ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படம். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த தேவ் பட்டேல், அனுபம் கெர் ஆகியோருடன், ஹாலிவுட் நடிகர்கள் பலர் நடித்துள்ள இப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில், கடந்த 14-ஆம் தேதி வெளியானது. நியூசிலாந்தில் மசூதித் தாக்குதலில் 40 பேர் பலியான கொடூரம் நடந்த காரணத்தினால், ‘ஹோட்டல் மும்பை’ படத்தை அடுத்த இரு வாரத்திற்குத் திரையிடத் தடை செய்துள்ளது, நியூசிலாந்து அரசு. துக்கம் அனுசரிக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். தடை நல்லது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

‘`2013-ம் ஆண்டுதான் என் வாழ்வில் மோசமான ஆண்டு’’ என பீலாகியிருக்கிறார் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ கேப்டன் எம்.எஸ்.தோனி. ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் சிஎஸ்கே-வின் ‘ரோர் ஆப் தி லயன்’ வெப்சீரிஸில்தான் மனம்திறந்திருக்கிறார் தோனி. “ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் அதிர்ந்துபோனேன். கொலைக்குற்றத்தைவிடப் பெரிய குற்றம் என்னைப் பொறுத்தவரை மேட்ச் பிக்ஸிங் குற்றம்தான். மேட்ச் பிக்ஸிங் புகார்களால், தவறு செய்தவர்களைவிட பாதிக்கப்பட்டது சி.எஸ்.கே-வின் கிரிக்கெட் வீரர்கள்தாம்’’ என்று சொல்லியிருக்கிறார் கேப்டன் தோனி.  மறப்போம்... மன்னிப்போம்!

இன்பாக்ஸ்

பாலிவுட் நாயகன் அமீர் கான் வெள்ளை முடி, முன் வழுக்கையுடன் கொண்ட மேக்கப் போடும் வீடியோ ஒன்று வைரலானது. அமீர் கான், 1994-ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இது அந்தப் படத்திற்கான மேக்கப்பாக இருக்கும் என நினைத்தார்கள், ரசிகர்கள். பின்பு, அது ஒரு விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டது எனத் தெரிந்து, ‘விளம்பரத்திலும் வெரைட்டி காட்டுகிறாரே...’ என அமீரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள், நெட்டிசன்கள். மிஸ்டர் டிபரென்ட்!

2014-ல் வெளியான கொரியன் நகைச்சுவைத் திரைப்படம் ‘மிஸ் கிராணி.’ 70 வயது மூதாட்டி திடீரென 20 வயதுக் குமரியாக மாறுவதால் ஏற்படும் சம்பவங்களை மையப்படுத்திய இந்தக் கதையின் தழுவலாகத் தயாராகிக்கொண்டிருக்கும் ‘ஓ பேபி’ படத்தில், சமந்தாவும் மூத்த நடிகை லட்சுமியும் நடித்து வருகிறார்கள். பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஒரு புரமோஷன் பாடலுக்கு சமந்தாவும், லட்சுமியும் இணைந்து ஆடியிருக்கிறார்கள். இந்தப் பாடலைப் படமாக்கும்போது லட்சுமி, சமந்தாவுக்கு `டப்’ கொடுக்கும் விதமாக ஆடி அசத்தியிருக்கிறார். 20 வருடங்களுக்குமுன் ‘ஜீன்ஸ்’ படத்தின் நடிகை லட்சுமி, ஐஸ்வர்யா ராயுடன் ஆடியிருந்தார். அதன் பிறகு, இப்போது சமந்தாவுடன் ஆடியிருக்கிறார். சபாஷ் சரியானபோட்டி!

ந்தியில் வெளியான பிளாக் பஸ்டர் படமான ‘பதாய் ஹோ’வைத் தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தியத் திரைத்துறையின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Flimfare’  விருதுகளில் இந்த வருடத்திற்குப் பல துறைகளிலும் பரிந்துரை செய்யப்பட்டது. அதில், சிறந்த கதைக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற, தனக்கும் அந்தக் கதையில் பெரும்பங்கு இருப்பதால் தன் பெயரையும் பட்டியலில் இணைக்கும்படி இணைக் கதாசிரியரான ஜோதி கபூர் கேட்டுள்ளார். தொடர்ந்து  படத்தின் முதன்மைக் கதாசிரியர் ஷாந்த்னு ஸ்ரீவத்ஸா, ‘எனக்கு பிலிம்பேர் விருதே வேண்டாம். கதை எழுதாத ஆளுடன் விருது வாங்குவதற்குப் பதிலாக அதை வாங்காமலே இருக்கலாம்” எனத் தெரிவித்திருக்கிறார். சர்ச்சையான கதைதான்!

இன்பாக்ஸ்

தேர்தல் களத்தில் இப்போதெல்லாம் ஸ்போர்ட்ஸும் தெறிக்கிறது. இந்தியாவில் கால்பந்தின் தாய் பூமியான மணிப்பூரில் ராகுல் காந்தியிடம் பார்சிலோனாவா, ரியல் மேட்ரிடா என்று ஒருவர் கேட்க. “நான் எப்போதும் ரொனால்டோ ரசிகன் என்பதால் இப்போது யுவன்டஸுக்கு மாறியிருக்கிறேன். பார்சிலோனாவா, ரியல் மேட்ரிடா என்று வரும்போது நான் ரியல் மேட்ரிடின் ரசிகன்” என்று சொல்லியிருக்கிறார் ராகுல். ஒரு கால்பந்து ரசிகர் பிரதமராக வரவேண்டும் என மணிப்பூரில் எக்கச்சக்க கொண்டாட்டம்!  கால்பந்துக் கனவுகள்

இன்பாக்ஸ்

லக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டென். கடந்தவாரம் நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகர மசூதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இதில் இந்தியர்களும் அடக்கம். இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பர்தா அணிந்து கலந்துகொண்டார் பிரதமர் ஜசிந்தா ஆர்டென். “தாக்குதல் நடத்தியவர் தீவிரவாதி, குற்றவாளி. அவரை நாங்கள் குற்றவாளியாகவே பார்க்கிறோம். எந்த மதத்தின், எந்தப் பிரிவின் பிரதிநிதியாகவோ அவரை நாங்கள் பார்க்கவில்லை” என்று மதத் தீவிரவாதத்துக்குத் தெளிவான மெசேஜ் கொடுத்திருக்கிறார் ஜசிந்தா. முன்மாதிரி பிரதமர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism