40 நகைச்சுவை நடிகர்களுடன் நடிக்கும் சசிக்குமார்! | sasikumar to act with 40 actors in his new untitled film with nikki galrani

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (13/02/2019)

40 நகைச்சுவை நடிகர்களுடன் நடிக்கும் சசிக்குமார்!

வழக்கமாகக் கிராமத்து களத்தில் கத்தி, கபடா, அரிவாள் என்று அடிதடி படங்களில் நடிப்பது சசிகுமாரின் சினிமா வரலாறு. அவர் தற்போது காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடித்து வருகிறார். காமெடி ஜானரில் கலக்கும் சுந்தர்.சியின் உதவியாளர் கதிர்வேலு இப்படத்தை இயக்குகுகிறார். கதிர் சொன்ன காமெடிக் கதை சசிகுமாருக்கு ரொம்ப ரொம்ப பிடித்துவிட, டபுள் ஒ.கே சொல்லிவிட்டார் சசிக்குமார். 

சசிகுமார்

இப்படத்தில், சசிகுமார் ஐ.டி-யில் பணிபுரியும் நபர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகுமாருடன் ராதாரவி, யோகி பாபு, ராஜ்கபூர், மனோபாலா, சாம்ஸ், தம்பி ராமையா, நிரோஷா, ஆனந்தராஜ் உட்பட 40 நகைச்சுவை நடிகர்களுடன் நடித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் தொடர்ந்து 20 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். பிரசாந்த் நடித்த 'ஜாம்பவான்' படத்தை எடுத்த ராஜா, இந்தப் படத்தை தயாரிக்கிறார். இயக்குநர்/நடிகர் சசிகுமார் தற்போது நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க