`தல அஜித் எங்க... நான் எங்க!’ - கலகலக்கும் ஜெய் | Actor Jai shares about his relationship with Venkat Prabhu, Premji and Yuvan

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (13/02/2019)

`தல அஜித் எங்க... நான் எங்க!’ - கலகலக்கும் ஜெய்

மாநாடு படத்தில் ஏதும் கேமியோ ரோல் தருகிறாரா வெங்கட் பிரபு எனக் கேட்டதற்கு, ``பொதுவா வெங்கட் பிரபு படத்துல நாங்க கேமியோ வரணும்னு அவரு முடிவு பண்ணுறதில்ல. நாங்கதான் முடிவு பண்ணுவோம்," என ஜெய் கலகலத்தார்.

வெங்கட் பிரபு இயக்கி, ஜெய், மிர்ச்சி சிவா, சத்யராஜ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'பார்ட்டி'. ஏற்கெனவே ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து இயக்கவிருக்கும் படம் `மாநாடு'. அரசியல் நையாண்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ஜெய்

பொதுவாகவே ஜெய், வைபவ் உள்ளிட்டோர் வெங்கட் பிரபு இயக்கும் எந்தப் படமாக இருந்தாலும் அதில் முக்கிய கதாபாத்திரம் அல்லது கேமியோ ரோலிலோ கண்டிப்பாகத் தோன்றுவார்கள்.

இதுகுறித்து ஜெய்யிடம் பேசினோம். `உங்களுக்கு `மாநாடு' படத்தில் ஏதும் கேமியோ ரோல் தருகிறாரா வெங்கட் என அவரிடம் கேள்வியை நாம் முன்வைத்தோம்.`பொதுவா வெங்கட் பிரபு படத்துல எங்க கேமியோ வரணுமானு அவரு முடிவு பண்ணுறதில்ல. நாங்கதான் முடிவு பண்ணுவோம். அவர் ரோல் தராரோ இல்லையோ, நான் கண்டிப்பா அந்தப் படத்துல ஒரு சீனுக்காவது வந்துட்டு போவேன். நாங்க எப்பவுமே அப்படிதாங்க. `பார்ட்டி' படத்த மட்டும்தான் வெங்கட் பிரபு பண்றாரு. உண்மையான பார்ட்டிய நாங்கதான் பண்ணுவோம். நாங்க எவ்வளோ சோர்வா இருந்தாலூம், தூங்கீட்டு இருந்தாலும் பிரேம்ஜி எங்க எல்லாரையும் ரெடி பண்ணி கூட்டிட்டுப் போய்டுவாரு" என ஜெய் கூறினார்.

பார்ட்டி படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேட்டோம். ``அதுதான் எனக்கே தெரியலங்க. நல்லவனா கெட்டவானானு நானும் கடைசி வர வெங்கட் பிரபு கிட்ட கேட்டேன். அவருக்கே அது தெரியல" என்றவரிடம், `வில்லன் பிளஸ் ஹீரோ. அப்போ அடுத்த மங்காத்தா அஜீத் நீங்கதானு சொல்லுங்க" என நக்கலாகக் கேட்டோம். உடனே, ``ஏங்க என்ன சொல்றீங்க. தல எங்க நான் எங்க" எனச் சொல்லி சமாளித்தார். பிரேம்ஜி கூட இவ்வளோ நெருக்கமான நட்புல இருக்கீங்களே, அவரா, யுவனானு கேட்டா உங்களோட சாய்ஸ் யார் என்று கேட்டபோது, ``பிரேம் யுவனோடதான் ரொம்ப நாள் இருந்தார். ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம்லாம் இல்ல. யுவன் சில விஷயத்துல கொஞ்சம் வேகமா செயல்படுவார். பிரேம் கொஞ்சம் டைம் எடுத்துப்பார். ரெண்டு பேரும் எனக்குப் ஃபேவரைட் தான். எப்படிப்பார்த்தாலும் ஒரே ரத்தம்தான ரெண்டுபேரும்" என்றார்.