சிம்ரன், த்ரிஷா கூட்டணியில் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படம்! | Trisha, Simran team up for Mega budget action adventure film

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (13/02/2019)

கடைசி தொடர்பு:19:40 (13/02/2019)

சிம்ரன், த்ரிஷா கூட்டணியில் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் படம்!

த்ரிஷா

'96' வெற்றிக்காத்து த்ரிஷாவுக்கு அடுத்த அடுத்த அதிரடியான படங்களைக் கொண்டு வந்து குவிக்கிறது. அந்த வகையில் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரைப்படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. '96' படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதர்சத்தைப் பெற்ற த்ரிஷாவுடன், 90களின் நட்சத்திர நாயகி சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.  

இப்படம் குறித்து தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவிடம் பேசினோம். ``திரிஷா, சிம்ரன் மட்டுமில்லாமல் படத்தில் இன்னும் சில ஆச்சர்யங்கள் உள்ளன. கதை மற்றும் களமாக இப்படம் இந்திய சினிமாவில் முதல் முறையாகச் செய்யக்கூடிய ஒரு புதிய முயற்சியாகவும் இருக்கும். மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து என பல்வேறு இடங்களில் தயாராகவுள்ளது. இப்படத்துக்காக சிம்ரன், த்ரிஷா இருவரும் சிறப்புப் பயிற்சிகள் எடுக்கவுள்ளனர். இந்தப் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மைல் கல்லாய் அமையும்'' என்று தெரிவித்தார். பேட்ட ஏஞ்சல்ஸ் பராக்!


[X] Close

[X] Close