`கண்ட நாள் முதல் பார்ட் 2' பற்றி லைலா, பிரசன்னா, கார்த்தி சொன்னது இதுதான்! - இயக்குநர் பிரியா | director priya speaks about her next movie

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:20:31 (13/02/2019)

`கண்ட நாள் முதல் பார்ட் 2' பற்றி லைலா, பிரசன்னா, கார்த்தி சொன்னது இதுதான்! - இயக்குநர் பிரியா

பிரியா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 2005-ம் ஆண்டு வெளியான படம் 'கண்டநாள் முதல்' . அதில் லைலா, பிரசன்னா, கார்த்தி, என ஒரு பட்டாளமே நடித்திருந்தது. 

லைலா

இப்போது `கண்ட நாள் முதல்' படத்துக்கான மீட் பற்றிய ட்விட்டர் செய்ததால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பிரசன்னா, லைலா, கார்த்தி, இயக்குநர் பிரியா என அந்தப் படத்தின் டீம் மீட் நடந்திருக்கிறது. `கண்ட நாள் முதல்' பார்ட் 2 எடுப்பது பற்றியும் பேசியுள்ளோம் என லைலா மற்றும் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து இயக்குநர் பிரியாவிடம் பேசினோம். 

லைலா

``இவ்வளவு வருடங்கள் கழித்து நாங்கள் ஒன்றாகச் சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போது நடித்த நாள்கள், பழகிய தருணங்கள் என பல விஷயங்களை  நினைத்துப் பேசி மகிழ்ந்தோம். இப்போதும் நினைவிருக்கிறது. நான் முதலிலேயே 'அழகிய தீயே' பார்த்ததும், பிரசன்னாவை இந்தப் படத்துக்குப் ஃபிக்ஸ் பண்ணிட்டேன். லைலாவை எனக்கு பொதுவாகவே பிடிக்கும். அதனால் அவருக்கு இந்த ரோல் கொடுத்தேன். கார்த்தி எனக்கு நல்ல ப்ரெண்ட் என்பதால் அவரையும் ஓ.கே பண்ணிட்டேன். அதற்குப் பிறகுதான் பிரகாஷ் ராஜ்கிட்ட சொன்னேன். அப்படி எல்லாத்தையும் முன்கூட்டியே ஃபிக்ஸ் பண்ணி எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அந்தப் படத்தை எடுத்து முடித்தோம். 

லைலா

இப்போது அந்தப் படத்தின் பார்ட் 2-ல் நடிக்க எல்லாருமே ஆர்வம் காட்டினார்கள். எல்லாருக்குமே படம் பிடித்திருந்தது. மீண்டும் எடுத்தால் எல்லாருக்குமே பிடிக்கும் என நானுமே ஃபீல் பண்றேன். நிஜமாகவே, எங்களுக்கு அந்தப் படம் மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்.இப்போ வரைக்கும் என்னை அந்தப் படத்தின் மூலமாகத்தான் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். 

அதன் பிறகு, தமிழில் `கண்ணாம்பூச்சி ஏனடா' படம் எடுத்தேன். இப்போது, கன்னடத்தில் `ஆதி லட்சுமி புரணா' என்கிற படம் எடுத்திருக்கேன். டீசர் வெளியாகவிருக்கிறது. `கண்ட நாள் முதல்' படத்தைப் பொறுத்தவரை எல்லாமே கூடி வரணும்ல. யுவனிடம் பேசணும். ஃபண்ட் வரணும் என எத்தனையோ புராசஸ் இருக்கு. எடுப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு பார்க்கலாம்’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க