அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | Sivakarthikeyan's new movie release date announced

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (13/02/2019)

கடைசி தொடர்பு:22:05 (13/02/2019)

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்?

 

சிவகார்த்திகேயன்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இந்தப் படம் வரும் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அண்மையில் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இது பிங்க் படத்தின் ரீமேக் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1-ம் தேதி அஜித் படமும் திரைக்கு வரும் எனச் செய்திகள் வலம் வந்த நிலையில், இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க மே 1-ம் தேதி அஜித் படம் வெளிவருவதில் சந்தேகம் எனக் கோடம்பாக்கம் தெரிவிக்கிறது. படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதால் மே மாதம் 1-ம் தேதி படம் வெளியாவதில் தாமதம் ஆகலாம். இத்தகவலை உறுதி செய்த பிறகே, சிவகார்த்திகேயனின் படக்குழு இந்த ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.