துல்கர் சல்மான் படத்தில் ப்ரியா பவானிசங்கர்! | Actress priya bhavanishankar play a role in dulquer salmaan movie

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (13/02/2019)

துல்கர் சல்மான் படத்தில் ப்ரியா பவானிசங்கர்!

`கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலமாகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சீரியலில் நல்ல நிலைமையில் இருந்தப்போதே தீடிரென்று சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு சின்னத்திரையைவிட்டு விலகியிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த 'மேயாத மான்' படம் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

ப்ரியா பவானிசங்கர்

இந்தப் படம் இவருக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து கார்த்தியுடன் `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அதர்வாவுடன் 'குருதி ஆட்டம்' மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் 'மான்ஸ்டர்' படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். 

இந்நிலையில் ரா.கார்த்திக் இயக்கிக்கொண்டிருக்கும் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவு நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'வான்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதுதவிர 'பூமாராங்' இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கயிருக்கும் அடுத்த படத்திலும் அதர்வா கமிட்டாகியுள்ளார். இதுபற்றிய தகவலை படம் நிறுவனமே வெளியிட்டது. இதற்கிடையில் படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் படக்குழுவைச் சேர்ந்த சிலர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க