`உன்ன மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்' - ஹிட் அடிக்கும் சூர்யாவின் 'என்.ஜி.கே' டீஸர்! | surya released the teaser of Ngk directed by selvaraghavan

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:52 (14/02/2019)

`உன்ன மாதிரி ஆளுங்க அரசியலுக்கு வந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்' - ஹிட் அடிக்கும் சூர்யாவின் 'என்.ஜி.கே' டீஸர்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்.ஜி.கே' படத்தின் டீசர் இன்று வெளியானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக  சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  இன்று மாலை வெளியாவதாக இருந்த இந்த டீசர், நேற்று இரவே இணையத்தில் லீக் ஆனது. 

சூர்யா

இந்தப் படத்தின் டீசர், காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், பைரசி பரவுவதைத் தடுக்க, திரையரங்குகளில் ரசிகர்களின் மத்தியில் வெளிவருவதாக இருந்த டீசர், தற்போது அவசரமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டார் சூர்யா.

இதுகுறித்து 'என்.ஜி.கே' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டரில், “ சூர்யா அண்ணா தன் ட்விட்டர் பக்கத்தில் காலை 10.30 மணிக்கே டீசரை ரிலீஸ் செய்வார். தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாட இருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஒரிஜினல் டீசர் கொண்டு பைரசியை ஒழிப்போம், "#NGK #NGKTeaser ” எனப் பதிவிட்டிருந்தார்.