`இது காதல் திருமணம் அல்ல; இரு குடும்பமும் சேர்ந்து எடுத்த முடிவு' - சாயிஷா அம்மா மகிழ்ச்சி! | "It's not a love marriage; Two families have come together and took this decision" Sayyeshaa's mother

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:12:11 (15/02/2019)

`இது காதல் திருமணம் அல்ல; இரு குடும்பமும் சேர்ந்து எடுத்த முடிவு' - சாயிஷா அம்மா மகிழ்ச்சி!

ஆர்யா- சாயிஷாவின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், காதலர் தினமான இன்று திருமண செய்தியை உறுதி செய்திருக்கிறார் ஆர்யா. இவரது ட்விட்டர் பக்கத்தில் வருகிற மார்ச் மாதம் 'நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சாயிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். இதே பதிவை சாயிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆர்யா சயீஷா திருமணம்

இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனிடம் கேட்டபோது, "எங்களுக்கு இத்திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும் ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது ட்வீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்திருப்பார்கள். உண்மையில், இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினர். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.