ஸ்ரீதேவிக்கு திதி - பங்கேற்ற அஜித், ஷாலினி! | Actor ajith and shalini pays tribute to Sridevi

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (14/02/2019)

கடைசி தொடர்பு:17:53 (14/02/2019)

ஸ்ரீதேவிக்கு திதி - பங்கேற்ற அஜித், ஷாலினி!

வினோத் இயக்கி வரும் படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்தியில் ஹிட் அடித்த `பிங்க்' ரீமேக் இது என்று பலரும் தெரிவித்து வந்த நிலையில் படக்குழு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். நடிகை ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு போனி கபூர் தமிழில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

அஜித்

`இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவி, அஜித்துடன் நடித்திருந்தார். அப்போதே தமிழில் அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசையிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அதனால் அவருடைய ஆசையைக் கணவர் போனி கபூர் நிறைவேற்றி வரும் வேளையில் ஸ்ரீதேவியின் திதி இன்று சென்னையில் சி.ஐ.டி நகரில் உள்ள போனி கபூர் வீட்டில் நடந்தது. இதில் நடிகர் அஜித் அவருடைய மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகர் அனில் கபூரும் கலந்துகொண்டார். இவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close