பதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா! | Actress Madhumitha marriage held in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:43 (15/02/2019)

பதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா!

சின்னப் பாப்பா பெரிய பாப்பா டிவி ஷோவிலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தவர் காமெடி நடிகை மதுமிதா. இவருக்கு தன் தாய் மாமன் மகனான மோசஸ் ஜோயலுடன் இன்று சென்னையில் திருமணம் நடந்தது.

மதுமிதா

உறவுகளுக்கிடையேயான திருமணம் என்றாலும் மதுமிதா மற்றும் அவரின் தாய்மாமன் குடும்பங்களுக்கு இடையில் பல வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்ததாம். நண்பர்கள் சிலரின் உதவியுடன் மதுமிதாவும் முயற்சி செய்து பேச்சுவார்த்தைகள் நடத்தி அந்தப் பகையை முடிவுக்கு கொண்டு வர, இரு குடும்பங்களும் பேசி மதுமிதா-மோசஸ் ஜோயல் திருமண முடிவை எடுத்துள்ளனர். 

சென்னை கோயம்பேட்டில் இன்று காலையில் மிக எளிமையான முறையில் திருமணமும், தொடர்ந்து வரவேற்பும் நடந்தது. மணமகன் மோசஸ் மதுமிதா கழுத்தில் தாலி கட்டி, காலில் மெட்டி அணிவித்துவிட, தொடர்ந்து உறவினர்களும் நண்பர்களும் மணமக்களை வாழ்த்தினர். நடிகர்கள் சூரி, நடிகை நளினி, டாக்டர் ஷர்மிளா, ஆர்த்தி-கணேஷ்கர், 'பிக்பாஸ்' டேனியல் அன்னி போப், பரணி, குமரவேல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் அமைச்சர் ஜெயக்குமாரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

சினிமாவைப் பொறுத்தவரை தான் சேர்ந்து நடித்த நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தாராம் மதுமிதா.


[X] Close

[X] Close