வெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | first look of kennady club is released

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:23 (15/02/2019)

வெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

`ஜீனியஸ்' படத்துக்குப் பிறகு, `ஏஞ்சலினா', `சாம்பியன்' ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். தற்போது அவர் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் 'கென்னடி கிளப்' என்ற படத்தைத் தொடங்கி இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இதை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

கென்னடி கிளப்

இதில், சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கெனவே, தன் முதல் படைப்பான `வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் கபடிக் கதையைச் சொன்ன இவர், இப்படத்தில் பெண்கள் கபடியை கதைக் களமாக வைத்திருக்கிறார். `பாண்டியநாடு', `பாயும் புலி', `மாவீரன் கிட்டு' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இமான் - சுசீந்திரன் காம்போ இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இந்தியா முழுக்க கபடிக்கு புகழ்பெற்ற இடங்களுக்குப் பயணித்து எடுத்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close