அர்ஜுன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா? | Arjun Reddy Tamil remake Varmaa new director

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (15/02/2019)

கடைசி தொடர்பு:21:01 (15/02/2019)

அர்ஜுன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா?

தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருந்தது. இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்டு அந்தப் படம் தமிழில் முழுமையாக ஷூட் செய்யப்பட்டது. பிப்ரவரி 14-ம் தேதி  திரைக்கு வரவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பாலா படத்தின் ஃபைனல் கட் பார்த்த பட நிறுவனம் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை' என அறிவித்து அதிர்ச்சியளித்தது.

வர்மா

அதற்குப் பதில் ஷூட்டிங்கை மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். துருவ்தான் படத்தின் நாயகனாக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், இயக்குநர் குறித்தும் பின்னர் அறிவிப்போம் என்ற அறிவிப்பை ஈ4 நிறுவனம் வெளியிட்டது. 

இந்த நிலையில், அந்தப் புது இயக்குநர் யார் என இன்று தகவல்கள் வெளியாயின. `அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டியின் அசோசியேட் கிரிசய்யா இந்தப் படத்தை இயக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் ரதன் இசையமைக்க ஒரு பிரபல ஒளிப்பதிவாளரையும் ஒப்பந்தம் செய்துள்ளது அந்த தயாரிப்பு நிறுவனம். 

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


[X] Close

[X] Close