Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

k

இன்பாக்ஸ்

டைசியாக ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் கங்கணா ரணாவத். இப்போது ஜெயலலிதா பயோபிக் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இயக்குநர் விஜய் எடுக்கவிருக்கும் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க 24 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக புரளிகள் கிளம்ப... `ஐயயோ... அவ்ளோல்லாம் இல்லைங்க...’’ என பரபரத்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. 25 கோடியே குடுக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் `காப்பான்’ படத்தைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் சூர்யா. அடுத்து `இறுதிச்சுற்று’ சுதா கோங்குரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இசை ஜி.வி.பிரகாஷ். பாடல் களையெல்லாம் ஏற்கெனவே போட்டுக் கொடுத்துவிட்டார். பாடல்களைக் கேட்ட சூர்யா அசந்துபோய், ஜி.வி.பி-க்கு ஒரு பொக்கே அனுப்பி வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். `இந்தப் படம் ஏர்டெக்கான் நிறுவனத்தைத் தொடங்கிய கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கலாம்’ என்கிறார்கள். பறப்பான்!

இன்பாக்ஸ்

யக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணிதான் இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நாயகி. தெலுங்கில் `ஹலோ’ என்கிற ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நடித்த ‘மரக்கார்’ இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் வாய்ப்புகள் வந்து குவிகின் றனவாம். `இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தில் கல்யாணிதான் ஹீரோயின். அடுத்து துல்கர் சல்மானோடு ‘வான்’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். `வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்திலும் இவர்தான் நாயகி’ என்கிறார்கள். கலக்கல் கல்யாணி!

இன்பாக்ஸ்

னிஷா கொய்ராலா புற்றுநோய் குறித்து ‘ஹீல்டு’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். கர்ப்பப்பைப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட  மனிஷா அதை எப்படி எதிர்கொண்டார், கடந்து வந்தார் என்ற பயணத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தகத்தை அண்மையில் கௌஹாத்தியில் நடந்த பிரம்மபுத்திரா இலக்கிய விழாவில் வெளியிட்டிருக்கிறார். இரும்பு மனிஷா!

லகின் முதல் மின்-விமானம் கனடா நாட்டில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க நிறுவனமான ஹார்பர் ஏர்-மேக்னிக்ஸ் இவ்வகை விமானங்களைத் தயாரித்திருக்கிறது. 750 குதிரைத்திறன் சக்தி வாய்ந்த இந்த விமானம் வட-அமெரிக்காவின் சியாட்டெல் நகரிலிருந்து கனடா நாட்டின் வான்கோவர் நகருக்கிடையே பறக்க விருக்கிறது. கார்பன் மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் சக்தி வாய்ந்த, திறன்மிக்க, அதிக தூரம் பயணிக்கக்கூடிய விமானங்களைத் தயாரிக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. உலகெங்கும் பறக்கட்டும்!

இன்பாக்ஸ்

ஹாலிவுட் படங்களில், உலகம் முழுதும் மிகவும் எதிர் பார்க்கப்படுவது, `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’.  இம்மாத இறுதியில் படம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம் குறித்த செய்திகள் ஹாலிவுட் ரசிகர்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளன. படம் 182 நிமிடங்களாம். இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்களிலேயே இதுதான் மிக நீளமான படம். `ஏன் இம்புட்டு நீ.....ளம்’ என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தி ருக்கிறார்கள். தானோஸ் கிட்டருந்து உலகத்தைக் காப்பத்தணும்ல!

இன்பாக்ஸ்

மார்வெல்லின் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸில் இணைகிறார் ஏஞ்சலினா ஜோலி.  முதன்முறையாக சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கவிருக்கிறார். `எட்டர்னல்ஸ்’ என்ற காமிக்ஸ் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் ஏலியன்கள் மூலம் சக்தி பெற்ற நாயகியான `செர்ஸி” எனும் பாத்திரத்தில் நடிக்கிறார். சூப்பர் ஏஞ்சி!

இன்பாக்ஸ்

`இந்தியாவின் மிக வயதான வாக்களார்’ ஸ்யாம் சரண் நெகி (வயது 102) என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஹிமாச்சலின் கின்னாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்யாம் சரண். இவர்தான் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதல் நபர் என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது தேர்தல் ஆணையம். அவர் இதுவரை எல்லாத் தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்தும் சாதனை படைத்திருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கக் காத்திருக்கும் நிலையில் தான் அவருடைய பேரைப் போட்டு ‘தாத்தா ஆதரவு நமக்குத்தான்’ என பாஜக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட... “எனக்கும் பாஜக-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாஜக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என வழக்குதொடுத்திருக்கிறார் ஸ்யாம் சரண். ஒரு தாத்தா என்றும் பாராமல்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism