இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம் | kuralarasan accepts Islam infront of t rajendran and mother

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (16/02/2019)

கடைசி தொடர்பு:08:34 (15/03/2019)

இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன், இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அதற்கான சடங்குகள் நடந்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வந்தது. அதில், குறளரசன் தன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மத பெரியோர்கள் சில வாசகத்தை வாசிக்க குறளும் வாசிக்கிறார்.

குறளரசன்

இதுகுறித்து டி ராஜேந்தரிடம் பேசினோம். ``குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார். அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் செல்பவன்.  எனது சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்ப்ளம் அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்’’ என்றார்.  

 

 


[X] Close

[X] Close