`அப்பா, அம்மாவுக்காகத்தான் மறுமணம் செய்யப்போறேன்!’ - `சின்னதம்பி’ பவானி ரெட்டி | chinnathambi serial actress pavani reddy decided to get married this year!

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (16/02/2019)

`அப்பா, அம்மாவுக்காகத்தான் மறுமணம் செய்யப்போறேன்!’ - `சின்னதம்பி’ பவானி ரெட்டி

`அப்பா, அம்மாவுக்காகத்தான் மறுமணம் செய்யப்போறேன்!’ - `சின்னதம்பி’ பவானி ரெட்டி

பவானி ரெட்டி

சின்னதம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பவானி ரெட்டி. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். திருமணம் ஆகி எட்டு மாதத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் பிரதீப். அந்த சோகத்திலிருந்து மீண்டு, நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் பவானி ரெட்டி.

இந்நிலையில், தற்போது பவானி மறுமணம் செய்யப்போவதாகத் தகவல். இது குறித்து அவரிடம் பேசினோம், 

``என்னைப் புரிஞ்சிக்கிட்ட ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். என் கணவர் பிரதீப்புக்கும் எனக்கும் நெருக்கமான நண்பர். அவர் பெயர் ஆனந்த். அவரும் இதே மீடியா துறையில்தான் இருக்கிறார்.

``இது முழுக்க முழுக்க அரேஞ்சுடு மேரேஜ்தான். அப்பா, அம்மாவுக்காகத்தான் இந்தக் கல்யாணம் பண்ணிக்கப்போகிறேன். `நீ இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இப்படி இருக்கப்போறே... உன் வாழ்க்கையை எத்தனை வருஷங்கள் கடந்தாலும் கடைசி வரை நீதான் பார்த்துக்கணும்'னு சொன்னார்கள். `உங்க விருப்பம் எதுவோ அதைப்பண்ணுங்கனு சொல்லிட்டேன்.’ அதன் பிறகுதான் ஆனந்த் பற்றிப் பேசி திருமணம் செய்யலாம் என முடிவானது.’’

பவானி ரெட்டி

``பெற்றோர்கள் விருப்பத்தில் விட்டுட்டேன். என்னதான் அப்பா, அம்மா சொன்னாலும், எனக்கு ஆரம்பத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. அதனால் யோசிக்க டைம் வேணும்னு ஆறுமாதங்கள் டைம் எடுத்துக்கிட்டேன். அப்புறம்தான் ஓ.கே சொன்னேன். கடந்த மார்ச் மாதம்தான் ஓ.கே சொன்னேன்.’’

பவானி ரெட்டி

`இவர்தான் உன்னை புரிஞ்சிட்டு நடந்துப்பார்’னு என் அம்மா சொன்னாங்க. இந்த உலகம் என்ன செய்தாலும் பேசிக்கிட்டேதாங்க இருக்கும். உண்மையில், நான் அவரை மிஸ் பண்ணிட்டேன்.’’

`` `சின்னதம்பி’ சீரியல் எப்படிப் போகுது?’’

``செம்மையாப் போயிட்டு இருக்கு. ஆடியன்ஸ் நாங்க சீக்கிரம் சேரணும்னு நினைப்பாங்கப்போல. அப்படி நாங்க இருவரும் சீக்கிரம் ஒண்ணா சேர்ந்துட்டா சீரியல் முடிந்துவிடுமில்லையா. அதனால்தான் கதை அப்படியே நகர்ந்துகொண்டிருக்கிறது. பிரஜன் செம்ம டைப். டெடிகேட்டிவான ஆள். இந்த வருஷம் அவங்க வீட்டுக்கு புதுவரவா ஒரு பேபி வரப்போகுது. அவங்க எவ்வளவு தூரம் வெயிட் பண்ணாங்கனு தெரியாது. ஆனால், நான் அவங்களுக்கு நல்லது நடக்கணும்னு வேண்டியிருக்கேன். அவங்க கனவு நிறைவேறப்போகுது' என்கிறார் சந்தோஷத்தில் பவானி ரெட்டி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close