எழில் இயக்கத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்! | gv prakash next with director ezhil

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (16/02/2019)

எழில் இயக்கத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `காதலைத் தேடி நித்யானந்தா' படத்திலும் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஃபேன்டஸி படத்திலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ஜி.வி.பிரகாஷ்

எழில் இயக்கத்தில் 'ஜகஜாலக் கில்லாடி' படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்கு சத்யா இசையமைக்கிறார். மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. `100% காதல்', `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே', `குப்பத்து ராஜா', `ஜெயில்', `வாட்ச்மேன்' உள்ளிட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷின் கைவசம் உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close