`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்! | sivakarthikeyan's mr.local movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (17/02/2019)

கடைசி தொடர்பு:11:51 (17/02/2019)

`ஏரியா வந்து பாரு எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு' - மிஸ்டர் லோக்கல் டீஸர்!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல் டீஸர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத் தருவதாக சிவகார்த்திகேயன் உறுதி அளித்து இருந்தார். ஆனால், அந்த கமிட்மென்ட் மட்டும் நீண்ட நாட்களாக நிறைவேறாமலேயே இருந்தது. இப்படியான சூழ்நிலையில் தனது 13வது படத்தை பேசியபடி ஞானவேல் ராஜாவுக்குப் படம் நடித்துத் தர சிவகார்த்திகேயன் முன்வந்தார். இந்தப் படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்குகிறார்.

சிவா

`மிஸ்டர் லோக்கல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியிருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஹிப் பாப் தமிழன் ஆதி இசையமைத்துள்ளார். சதீஷ், யோகி பாபு காமெடி கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா

இதற்கிடையே இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ஹிப் பாப் தமிழன் ஆதி பின்னணி இசையில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல தனது `கலாய்', ஆக்ஷ்னில் சிவா பின்னியுள்ளார். இந்த டீஸர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close