ஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன்! - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ் | Mekha aakash shares her experience about Enai Noki Paayum Thota and Boomerang films

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:08 (18/02/2019)

ஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன்! - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்

`எனை நோக்கிப் பாயும் தோட்டா' படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸாகிவிடும் என்று நினைத்து ஏமாந்து போயிருப்பதாக நடிகை மேகா ஆகாஷ் கூறியிருக்கிறார். 

மேகா ஆகாஷ்

இயக்குநர் கண்ணன் எடுத்திருக்கும் 'பூமராங்' படத்தில் அதர்வாவுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ். படம் குறித்து அவரிடம் பேசினோம். ``இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். ஏன்னா, வழக்கமா பாட்டுக்கு மட்டும் வந்து போற ஹீரோயின் ரோல் இந்தப் படத்துல எனக்கு இல்லை. அதையும் தாண்டி நல்ல ரோல் இயக்குநர் கண்ணன் சார் கொடுத்திருக்கார். சந்தோஷமா இருக்கு.

படத்துல விஸ்காம் ஸ்டூண்ட் பொண்ணா நடிச்சிருக்கேன். நிஜ வாழ்க்கையில் என்னோட படிப்பும் விஸ்காம். அதனால ரொம்ப ஜாலியா நடிச்சேன். படத்துல ஸ்ட்ராங்கனா விஷயத்தை கண்ணன் சார் சொல்லியிருக்கார். விவசாயம் சம்பந்தப்பட்ட படம். 'Mughaiyazhi'  பாடல் வீடியோ ரிலீஸாகி நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இது ரொம்ப ஹேப்பியா இருக்கு. அதே நேரத்துல இந்தப் பாட்டை ஒரு தீவுலதான் ஷூட் பண்ணுனாங்க. நான் ரொம்ப கஷ்டப்பட்டு அழுதுக்கிட்டே டான்ஸ் பண்ணினேன். ஏன்னா, இந்தப் பாட்டு எடுக்குறப்போ அங்கே நல்ல மழை. ஒரே நாளுல பிருந்தா மாஸ்டர் ஷூட்டிங் எனக்காக முடிச்சாங்க. 'பாவம் பிள்ளை ரொம்ப அழுகுறா'னு முடிச்சிட்டாங்க. 

என்னோட படங்களில் எப்போவுமே எனக்கு நல்ல நடனம் அமைப்புகள் இருக்கிற பாட்டு அமைஞ்சிரும். சிம்பு சார்கூட ' வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்துலயும் அதே மாதிரி 'ரெட் கார்ட்' பாட்டை சொல்றேன். சிம்பு சார் ரிகர்சல்கூட பார்க்கமா இந்தப் பாட்டை ஆடிட்டு போயிட்டார். நான் ஆடுறப்போதான் ரொம்ப கஷ்டப்பட்டேன்’’ என்றவர் 'பூமராங்' படத்தைப் பற்றி தொடர்ந்தார். 

மேகா ஆகாஷ்

இந்தப் படத்துல பெரிய வசனம் நான் பேசி நடிச்சிருக்கேன். நல்ல அழுத்தமா இருக்கும். ஆனா, இந்த வசனத்தை பேசுறதுக்குள்ளே அதர்வாவும், சதீஸூம் என்னைக் கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க. அதனால சரியாவே பேசவே முடியல. ஆனா, எப்படியோ பேசிட்டேன். கண்டிப்பா படம் ரிலீஸூக்குப் பிறகு பலரும் என்னோட நடிப்பு நல்லயிருக்குனு பாராட்டுவாங்க. இந்த வருடம் ஆரம்பத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்னும் ரிலீஸாகமா இருக்கிறதுதான். ஏன்னா, இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். இந்தப் படத்தை ஆடியன்ஸ் பார்க்கணும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்தப் படம் ரிலீஸ் ஆகியிரும்னு நினைச்சு ஏமாந்து போயிறேன்’’ என்று வருத்தத்துடன் முடித்தார் மேகா ஆகாஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close