ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு! | R.k.selvamani won fefsi union election

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/02/2019)

கடைசி தொடர்பு:08:13 (18/02/2019)

ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

ஃபெப்சி அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னையில் நடந்தது. இதன் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஆர்.கே.செல்வமணி

தமிழ் சினிமாவில் தொழிலாளர்களுக்கான அமைப்பான ஃபெப்சிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவு அடைகிறது. இதையடுத்து, ஃபெப்சி அமைப்பு தேர்தலை அறிவித்தது. இதில், செல்வமணி மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

ஆர்.கே.செல்வமணி

ஃபெப்சி அமைப்பின் உறுப்பு அமைப்புகளான 22 சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மட்டுமே வாக்களித்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்ய முடியும். அதன்படி 66 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். தேர்தல் முடிவில் ஆர்.கே செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.கே.மூர்த்தி 16 வாக்குகள் மட்டுமே பெற்றார். செல்வமணி ஆதரவாளர்கள் 10 பேரும் துணைத் தலைவர்கள் மற்றும் இணைச் செயலாளர்களாக வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் செயலாளராக சண்முகம் 50 ஓட்டுகள் பெற்றும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close