ஜெயலலிதா இன்ஸ்பிரேஷன்தான் `தமன்னா' கேரக்டர்! - இயக்குநர் சீனுராமசாமி | Director seenu ramaswamy says about that actress thamana

வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (18/02/2019)

கடைசி தொடர்பு:13:54 (18/02/2019)

ஜெயலலிதா இன்ஸ்பிரேஷன்தான் `தமன்னா' கேரக்டர்! - இயக்குநர் சீனுராமசாமி

``நான் இயக்கிய 'தர்மதுரை' படம் வெற்றியடைந்தாலும் அடுத்த படத்தின் வாய்ப்பு என்னைத் தேடி உடனே வரவில்லை. என்னை எல்லோரும் சப்பாணியாதான் பார்த்தார்கள். ஆனா, ஒரே ஒருத்தர் மட்டும்தான் என்னை கோபால்னு கூப்பிட்டான். அதுவும், கோபால் சார்னு கூப்பிட்டான். அது வேற யாரும் இல்லை. விஜய் சேதுபதி. `மாமனிதன்'ங்கிற படத்தை சேதுவை வைத்து பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, சேதுவோட கால்ஷீட் பிரச்னை காரணமா தள்ளிப் போச்சு. அப்போதான் உதயநிதி என்னைக் கூப்பிட்டார்'' என்று பேச்சை தொடங்கினார் `கண்ணே கலைமானே' பிரஸ் மீட்டில் இயக்குநர் சீனு ராமசாமி. 

சீனு ராமசாமி

உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி நடிப்பில் `கண்ணே கலைமானே' படத்தை இயக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. படம் குறித்த பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய அவர், `தென்மேற்கு பருவகாற்று' படம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் இருந்தப்போ 'நீர்ப்பறவை' வாய்ப்பை எப்படி உதயநிதி எனக்கு கொடுத்தாரோ, அப்படிதான் `கண்ணே கலைமானே' படத்தின் வாய்ப்பையும் கொடுத்தார். இந்தப் படத்துல ஒரே ஒரு குத்துப் பாட்டு வைக்கச் சொல்லி உதயநிதி ஆபீஸில் இருக்கும் செண்பகம் என்னிடம் கேட்டார். 'என் படத்துல வைக்க இடம் இல்லைன்னு சொன்னேன். அவர் கேட்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் வந்து நிற்க ஆரம்பிச்சிட்டார். அவருடைய தொல்லை தாங்க முடியாம உதயநிதிக்கிட்ட போய் நின்னுட்டேன். `நான் பார்த்துக்குறேன்னு சொல்லி அனுப்பி வெச்சிட்டார். இந்தப் படத்துக்கு நான் சொன்னதை  மட்டும்தான் உதயநிதி செய்தார். 

பெண் கதாபாத்திரத்தை உயர்த்தி காட்டற படத்துல நான் நடிக்கிறேன்னு சொன்ன உதயநிதிக்குதான் என்னோட நன்றியை சொல்லணும். உதயநிதி மட்டும் சரின்னு சம்மதம் தெரிவிக்கலன்னா, இந்தப் படம் உருவாகியே இருக்காது. இது மாதிரியான எதார்த்தமான கதைக்களம் கொண்ட 10 படத்துல உதயநிதி நடிச்சாலே போதும். அவரை தமிழ் சினிமாவுல யாராலும் அடிச்சிக்க முடியாது. அழுகுற காட்சியிலகூட கிளிசரின் போட மாட்டார். தத்ரூபமாக நடிப்பார். 

உதயநிதி ஸ்டாலின்

முதல்நாள் ஷூட்டிங்போது அவர்கிட்ட கொடுத்த உடைகள் ஒரு கிழிஞ்ச கைலியும், பனியனும்தான். அதை போட்டுகிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். என்னோட கமலக்கண்ணன் கேரக்டருக்கு உதயநிதி சரியா பொருந்திப் போனார். அவரைத் தவிர வேற யாரும் இந்தக் கேரக்டரை பண்ண முடியாதளவுக்கு நடிச்சிட்டார். அதே மாதிரி படத்தோட நாயகி தமன்னா நல்ல ஆன்மா.  படத்துல மேக்கப் போடாம நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே நடிச்சிக் கொடுத்தாங்க. கலையரசி அவங்க. முக்கியமா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்ஸ்பிரேஷனா வெச்சுதான் தமன்னாவுடைய 'பாரதி' கேரக்டரை வடிவமைச்சேன். அவங்க மாதிரியே உடை, நடை, பாவனை இருக்கணும்னு நினைச்சேன்'' என்று நெகிழ்ச்சியாக சொன்னார் சீனு ராமசாமி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close