`நம்ம ஊர் நடிகர்களை தரம் தாழ்த்திப் பேசுவது நியாயமில்லை!' - ஆடியோ வெளியீட்டில் ரவி மரியா வேதனை | dirtector actor ravi mariyaa teasing myshkin in agavan audio launch

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (18/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (18/02/2019)

`நம்ம ஊர் நடிகர்களை தரம் தாழ்த்திப் பேசுவது நியாயமில்லை!' - ஆடியோ வெளியீட்டில் ரவி மரியா வேதனை

முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு, புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கியுள்ள திரைப்படம், 'அகவன்'. ஆன்மிகம் கலந்த கதையம்சம் கொண்ட இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்புச்செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன்,  ரவி மரியா ஆகியோர் கலந்துகொண்டனர். 

அகவன்

புதுமுக நடிகர் கிஷோருக்கு அறிவுரை சொல்லும் வகையில் பேசிய இயக்குநர் ரவி மரியா, ``சில இயக்குநர்கள் ஆங்கில பாணியில் அமைதியா நடிக்கிறது நடிப்புனு சொல்றாங்க. நம்ம ஊர்ல செத்த செய்தி கேட்டாலே சத்தமா ஒப்பாரிதான் வைப்போம். அதவிட்டுட்டு ரெண்டு சொட்டு கண்ணீர்தான் விடுவோம்னா இயல்பா இருக்காது. இதுல ஒரு இயக்குநர், 'பேரன்பு' ஆடியோ லான்ச்ல மம்மூட்டியை பாராட்டினாரு. அண்டை மாநில பெரிய நடிகரைப் பாராட்டலாம். அதுக்கு நம்ம ஊர் நடிகர்களைத் தரம் தாழ்த்திப் பேசுறது நியாயம் இல்லை.

ரவி மரியா

நம் குடும்பத்தில் இருப்பவர்களைத் தரம் தாழ்த்திப் பேசியது தவறு. அன்று பேசிய அந்த இயக்குநரின் படத்தில் நடித்த நாயகர்கள் அனைவருமே இங்க இருந்தவங்கதான். அதை மறந்துட்டு பேசுறார். தமிழ் கலாசாரத்துல இல்லாத ஒரு குணாதிசயத்தை நடிப்புனு சொல்றாங்க. அதை அவங்களுக்குள்ள பேசிக்கலாம். இப்படி நம்ம நடிகர்களைப் பத்தி பேசக்கூடாது. இந்தப் படத்தின் நாயகன் கிஷோர் இலக்கணங்களை உடைத்து நடிக்கணும்" என்று கூறினார். இதன்பிறகு பேசிய பாக்யராஜ், ரவி மரியாவை வெகுவாகப் பாராட்டினார்.  


[X] Close

[X] Close