`உங்கள மத்தவங்க திட்டுறாங்களேன்னு கேட்டால் ரஜினி சொல்லும் ஒரே பதில் இதுதான்!'- ராகவா லாரன்ஸ் | This is Rajini's answer to trolls, says Raghava Lawrence

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (18/02/2019)

கடைசி தொடர்பு:16:52 (18/02/2019)

`உங்கள மத்தவங்க திட்டுறாங்களேன்னு கேட்டால் ரஜினி சொல்லும் ஒரே பதில் இதுதான்!'- ராகவா லாரன்ஸ்

புதுமுக இயக்குநர் ஏழுமலை இயக்கியுள்ள திரைப்படம் `அகவன்'. இதன் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் ஆரம்ப காலம் முதல் ரசிகராய் இருந்தவர். ஆன்மிகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரஜினி ரசிகர்கள் மத்தியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பாக்யராஜ், யுகபாரதி, ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், மதுரை அன்பு செழியன், பிக்பாஸ் பரணி, எங்கேயும் எப்போதும் சரவணன், நோபல், கராத்தே தியாகராஜன், ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ரஜினி மன்ற விழாபோல் நடந்த இந்த விழாவில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசப்பட்டது. 

அகவன்

நிகழ்ச்சியில் இறுதியாகப் பேசிய ராகவா லாரன்ஸ், ``சூப்பர்ஸ்டார், ரசிகர்கள்தான் குடும்பத்த பாத்துக்கணும், ஆன்மிகத்தை ஆர்வம் செலுத்தணும்னு சொல்வார். அதேமாதிரி, ரவிச்சந்திரன் ஜெயிச்சு காட்டியிருக்கார். ஒரு ரஜினி ரசிகன் எப்படியிருக்கணுங்கிறதுக்கு இவர் ஒரு உதாரணம். சூப்பர்ஸ்டார் யாருக்கும் துரோகம் நினைக்கமாட்டார். `அவர் துரோகம் பண்ணிட்டார்'ன்னு யாரும் சொல்லவும் முடியாது. யாரையும் தப்பா பேசமாட்டார், அவரை நிறைய பேர் திட்டும்போதுகூட அவரிடம் நான் அதைப் பத்திக்கேட்டா ``தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துபார்'னு சொல்லிடுவார்" எனப் பேசினார்.

ராகவா லாரன்ஸ்

தொடர்ந்து, தாயின் மகத்துவத்தைப் பற்றிப் பேசிய லாரன்ஸ் அவரது உரையின் முடிவில் தண்ணீர் கேட்டார். அதைத் தயாரிப்பாளர் தர வாங்கிக் குடித்தவுடன், ``தண்ணீர் கேட்க காரணம் இருந்தது. என் ஓட்டு உங்களுக்குத்தான்" எனக் கூறினார் லாரன்ஸ். தண்ணீர் தந்தது ரஜினியின் கட்சி போல் பாவித்து ரஜினிக்குத்தான் என் ஓட்டு என்று சூசகமாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.    


[X] Close

[X] Close