`இந்தியில் என் மகன் பண்றார்; தமிழில் நான் பண்றேன்!’ - அர்ஜுன் ரெட்டி ரீமேக் குறித்து ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் | Ace cameraman ravi k chandran to work as DOP for varma

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (19/02/2019)

கடைசி தொடர்பு:14:35 (19/02/2019)

`இந்தியில் என் மகன் பண்றார்; தமிழில் நான் பண்றேன்!’ - அர்ஜுன் ரெட்டி ரீமேக் குறித்து ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்

தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருந்தது. இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் தமிழில் முழுமையாக ஷூட் செய்யப்பட்டு, பின் கைவிடப்பட்டது.

வர்மா

தயாரிப்பாளருக்கு பாலா எடுத்திருந்த வர்மா படம் திருப்தியளிக்காததால் கை விடுகிறோம் என அறிவிப்பு அளித்திருந்தனர். பாலா, தன் படைப்பு சுதந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு வர்மா படத்திலிருந்து விலகியதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதே பெயரில் படத்தை ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்ட  தயாரிப்பு நிறுவனம் 'அர்ஜுன் ரெட்டி’  படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யாவை இந்தப் படத்தை இயக்க வைக்கின்றனர். மேலும், பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

ரவி.கே.சந்திரன்

இந்த நிலையில், 'இந்தியாவின் முதன்மை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி கே சந்திரன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து பேசும்போது ``இந்தியில் 'ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர்-2' படத்தின் வேலைகளை முடித்து அடுத்த படமாக இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். என்னோட பல மலையாளப் படங்கள்ல விக்ரம் நடிச்சிருக்கார். அந்த நட்பும் இதுக்கு ஒரு காரணம். 

ரவி கே.சந்திரன்\

சுவாரஸ்யமாக அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான `கபிர் சிங்' படத்தை என் மகன் சாந்தகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார் அதனால் இப்படத்தை ஒப்புக்கொண்டேன்" எனக் கலகலத்தார் ரவி.கே.சந்தரன்.  படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close