அமெரிக்காவில் பா.இரஞ்சித்தை வாழ்த்திய ரஜினி ரசிகர்கள்! | Rajini fans greet the welcome to pa.ranjith

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (19/02/2019)

அமெரிக்காவில் பா.இரஞ்சித்தை வாழ்த்திய ரஜினி ரசிகர்கள்!

ரஜினியை வைத்து இரண்டு படங்களைத்  தொடர்ந்து இயக்கிய பா.இரஞ்சித், அடுத்தாக இந்திப் படம் ஒன்றை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்தப் படம், சுதந்திரப்போராட்ட தியாகியும், பழங்குடியின மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியவருமான பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கிறது எனத் தகவல் வெளிவந்திருக்கிறது. மேலும், 'பியாண்ட் தி கிலௌவ்ட்ஸ்' படத்தைத் தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனம், இதைத் தயாரிக்க இருக்கிறது. 

பா.ரஞ்சித்

இதனால், படம்குறித்த வேலைகளில் இருக்கும் இவர், தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் சாராம்சமே, தலித் சினிமா ஃபெஸ்ட்டிவல் விழாவில் பங்கேற்பதே. இதற்காக, இந்தியாவிலிருந்து இயக்குநர் நாகராஜ் மஞ்சுளா மற்றும் ரஞ்சித்தை பேச அழைத்துள்ளனர். இதுதவிர, ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுடனும் ரஞ்சித் கலந்துரையாட உள்ளார். 

ரஞ்சித்

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஞ்சித்தைப் பார்த்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். வட அமெரிக்க ரஜினி மக்கள் மன்றம் டெலவர்- பென்சில்வேனியா கிளை மற்றும் டெலவர் பெருநிலத் தமிழ் நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளனர். ரஞ்சித் படைப்புகள் பற்றி சிறப்புக் கலந்துரையாடல் நடந்துள்ளது. மேலும், அவருக்கு நினைவு பரிசு வழங்கியுள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close