’நாலாவது ஷெட்யூல் ஆரம்பிச்சாச்சு; இன்னும் மூணு ஷெட்யூல் இருக்கு!’ - #SK14 அப்டேட்ஸ் | Sivakarthikeyan's 14th movie updates

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (19/02/2019)

கடைசி தொடர்பு:17:59 (19/02/2019)

’நாலாவது ஷெட்யூல் ஆரம்பிச்சாச்சு; இன்னும் மூணு ஷெட்யூல் இருக்கு!’ - #SK14 அப்டேட்ஸ்

’சீமராஜா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், ’மிஸ்டர் லோக்கல்’ மற்றும் ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரோடு ஒரு ஏலியன் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தின் ஷூட்டிங் எந்தத் தடையும் இன்றி நடந்துமுடிந்தது. ’வேலைக்காரன்’ மற்றும் ’சீமராஜா’ படங்களை 24 AM நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்ததால், ரவிக்குமாரின் 'ஏலியன்' படம் மூன்றாவது ஷெட்யூல் முடிந்ததும் போதிய பணம் இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இந்தப் படம் ட்ராப் என்றும், தயாரிப்பாளர் RD ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்னை என்றும் பல தகவல்கள் வர ஆரம்பித்தன. இந்தத் தகவல்களைப் பொய்யாக்கும் விதமாக, நேற்று மீண்டும் படப்பிடிப்பைத்  தொடங்கியிருக்கிறார்கள். நேற்று, வி.ஜி.பி-யில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுகுறித்து பட வட்டாரங்களிடம் பேசியபோது, ‘ஏற்கெனவே மூன்று ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டன. இப்போது, நாலாவது ஷெட்யூல் ஆரம்பிச்சாச்சு; இன்னும் மூணு ஷெட்யூல் ஷூட்டிங் இருக்கு. கிட்டத்தட்ட 50 நாள்கள் இந்த ஷூட்டிங் நடக்கும். மத்தபடி படத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. படத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்’ என்றார்கள்.


[X] Close

[X] Close