`சிம்புவின் ஆக்‌ஷன்; டான்ஸ்; ஹூமர்..!'- `வந்தா ராஜாவாதான் வருவேன்’ மேக்கிங் சுவாரஸ்யங்கள்! | Exclusive movie making video of vantha rajavathaan varuven

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (19/02/2019)

கடைசி தொடர்பு:18:37 (19/02/2019)

`சிம்புவின் ஆக்‌ஷன்; டான்ஸ்; ஹூமர்..!'- `வந்தா ராஜாவாதான் வருவேன்’ மேக்கிங் சுவாரஸ்யங்கள்!

சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, நாசர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த படம்தான் `வந்தா ராஜாவாதான் வருவேன்’. தெலுங்கில் பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் கூட்டணியில் வெளியான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கான இதை, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. 

 

 

 

பிப்ரவரி மாதம் 1 ம் தேதி ரிலீஸான `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ்வான மேக்கிங் வீடியோ தற்போது சினிமா விகடன் யூடியூப் சேனனில் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், சிம்பு ஒவ்வொரு காட்சிக்கும் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்; பாடல்கள் படமாக்கப்படும் போது, எப்படி நடனத்தை ஒத்திக்கைப் பார்க்கிறார்; ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி மற்ற நடிகர், நடிகைகளை ஜாலியாகக் கலாய்க்கிறார் என்பதெல்லாம் இருக்கிறது. சிம்பு மட்டுமல்லாது மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, யோகி பாபு, பிரபு, ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், ‘என்னம்மா’ ராமர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை எனப் பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்த லூட்டிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


[X] Close

[X] Close