''நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை, சித்தரைத்தான் சந்தித்தேன்!'' -'பிக் பாஸ்' பாலாஜி | I am not converted to any religion says balaji!

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (19/02/2019)

கடைசி தொடர்பு:19:58 (19/02/2019)

''நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை, சித்தரைத்தான் சந்தித்தேன்!'' -'பிக் பாஸ்' பாலாஜி

பாலாஜி

மத மாற்றம் குறித்து பாலாஜியிடம் பேசினோம், ''நானே இதைப் பற்றிப் பேசலாம் என்றிருந்தேன். எனக்கு சித்தர்களின் மீதான ஈடுபாடு அதிகம். மூக்குப்பொடி சித்தர் என்றால் அவ்வளவு ஈடுபாடு. நித்யாவுக்கும் எனக்கும் இருக்கும் பிரச்னை எல்லாரும் அறிந்ததே. ஒரே நாளில் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைந்தேன். தப்பு பண்ணியிருந்தால், நான் போலீஸ் ஸ்டேஷன் அங்கு இங்குனு போறது நியாயம். எனக்கு ஏன் இப்படினு நொந்துபோயிருந்தேன். அப்போதுதான், கனகப்பட்டியில் ஒரு சித்தர் இருக்கார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போனேன். அவரைப் பார்த்தப் பிறகு எனக்கு நிம்மதி கிடைத்ததாக உணர்ந்தேன்.

அப்படி மன உளைச்சலில் இருந்தபோதுதான், ஒருநாள் நிம்மதி தேடி திருவண்ணாமலைக்குப் போனேன். அங்கே மூக்குப்பொடி சித்தரைச் சந்தித்தேன். அவர்தான் அண்ணாமலையார் கோயிலுக்குப் போகும்படி சொன்னார். அதன்படி நானும் போனேன். அதிலிருந்து எனக்கு இன்னும் சித்தர்கள் மீதான ஈடுபாடு அதிகமானது. அதற்குப் பிறகு கிடைத்ததுதான் பிக் பாஸ் வாய்ப்பு. அதே இடத்திற்கு நித்யா வந்தாங்க. இதெல்லாம் எதிர்பாராதவிதமாக நடந்தது.  சித்தர்கள் என் வாழ்க்கையில் நிறைய அதிசயத்தை நடத்தினார்கள். பாலாஜி யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே சித்தர் என்னை அனுப்பியிருந்தார் என்பதாகவே நான் நினைக்கிறேன். 

பாலாஜி

இன்றைக்கும் என்னிடம் நிறையப் பேர் போட்டோ எடுப்பவர்கள், குழந்தைகளும் பெண்களும்தான். ஆரம்பத்தில் என் பெயரைக் கெடுக்க ஒரு டீமே கிளம்பியிருந்தது. ஆனால், இப்போது அது எங்க இருக்குனே தெரியல. இப்போ, என் பெயரைக் கேட்டாலே ஓடுறாங்க போல. அவங்களை இன்னும் ஓடவிடுவேன்'' என்பவர், 

சமீபத்தில், சி.எம் சார் ஊரான எடப்பாடிக்கு ஒரு ஸ்கூல் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அப்போது, கனகப்பட்டி சித்தரிடம் இருக்கிற ஒருத்தர், எனக்கு போன் பண்ணி சொன்னார். 'பாளத்துக்கு பக்கத்துல ஒரு சித்தர் இருக்கார். அவரைப் பார்க்க முடியுமா'னு கேட்டார். சரி சார் பார்க்கிறேன்னு போனேன். அவர், எனக்காகக் காத்திருப்பவர் போல இருந்தார். கனகப்பட்டி பாளத்துக்கு கீழயே அழுக்கு மூட்டையை வைத்துப்படுத்திருந்தார்.  மசால் தோசையும், ஃப்ரூட்டியும் வாங்கிட்டுப் போனேன். சித்தர்கள் மூக்குப்பொடியைத்தான் விரும்புவார்கள். எப்பவுமே கை நீட்டி வாங்க மாட்டாராம். கீழ வைடானுதான் சொல்லுவாராம். அன்றைக்கு நான் கொண்டுபோனதும், கொடுடானு வாங்கிட்டார். அன்றைக்குக் காலையில்தான் சென்னை அண்ணா நகரில் ஒரு வீட்டுக்கு பால் காய்ச்சியிருந்தேன். பாட்டுப் பாடுவார்கள்... புது வீடெல்லாம் செட் ஆகிடுச்சானு கேட்டார். என்கூட வந்திருந்தவர்கள் எல்லாம் திகைச்சு நின்னுட்டாங்க. 

பாலாஜி

''அங்க, பக்கத்திலேயே ஒரு முருகன் கோயில் இருக்கும், அதுக்குப் போயிட்டுப் போடா''னு சொன்னார். ''நான் சென்னை போகணும். திரும்ப நேரம் ஆகும்னேன்.'' ''போ சொல்லுடா அவன'' என்றார். என்னுடன் இருந்தவர்களிடம், மறுநாள் மாலைதான் நிகழ்ச்சி என்பதால் கோயிலுக்குப் போனேன். அது, சித்தர்கள் கோயிலாம். அங்கேயே பொங்கல் வச்சி வழிபடுவாங்கலாம். மேல போய் முருகனைப் பார்த்து குடும்பிட்டு வந்தேன். அங்கிருந்த புரோகிதர், மனைவி குழந்தைகளோடு வாங்கன்னு சொன்னார். என் வாழ்க்கையில் நடந்த பிரச்னைகளை அவரிடம் விளக்கமாகச் சொன்னேன். ''பாதி பிரச்னை தீர்ந்திருக்கு, எது வந்து சேரவேண்டுமோ அது வந்து சேர்ந்தே ஆகணும் கவலைப்படாம போங்க'னு சொல்லி அனுப்பினார். மூக்குப்பொடி சித்தர் என்பவர், டி.டி.வி. தினகரனையே பார்க்கல. அவர் போயிட்டு வந்த பிறகு, மூணு நாள் கழிச்சுதான் நான் போனேன். என்கிட்ட பேசினாருங்கிறது அதிசயம்தான்'' என்றார் பாலாஜி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close