வர்மா இப்போ `ஆதித்யா வர்மா' - வெளியான துருவின் புது லுக்! | Dhruv's varma retitled as Adithya varma

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (19/02/2019)

கடைசி தொடர்பு:19:54 (19/02/2019)

வர்மா இப்போ `ஆதித்யா வர்மா' - வெளியான துருவின் புது லுக்!

பாலா இயக்கத்தில் துருவ் நடித்த `வர்மா' படம் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு பரஸ்பர காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது.

வர்மா

பாலா எடுத்திருந்த `வர்மா' படம் தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் கை விடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டனர். பாலா, தன் படைப்புச் சுதந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு வர்மா படத்திலிருந்து விலகியதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், படம் அதே பெயரில் ரீபூட் செய்யப்படும், படம் ஜூன் மாதம் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது.  

ஆதித்யா வர்மா

தற்போது `வர்மா' படத்திற்கு `ஆதித்யா வர்மா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார். பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ பாலிவுட் படத்தில் அறிமுகமானவர். ப்ரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய முந்தைய வெர்ஷனுக்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10ம் தேதி தொடங்கவுள்ளது.


[X] Close

[X] Close