`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தடம் டிரெய்லர் | arun vijay starrer thadam trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (19/02/2019)

கடைசி தொடர்பு:21:09 (19/02/2019)

`ரைட்டரோ, ஃபிலிம் மேக்கரோ வருவான்னு நினைச்சேன்; யாருப்பா நீ’ - வெளியானது தடம் டிரெய்லர்

`முன்தினம் பார்த்தேனே', `தடையறத் தாக்க', `மீகாமன்' ஆகிய படங்களை இயக்கியவர், மகிழ்திருமேனி. இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் `தடம்' படத்தின் டிரெய்லர் வெளியானது. 

அருண் விஜய்

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. அருண் விஜய்யின் 24-வது படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில் தான்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட், வித்யா பிரதீப் , சோனியா அகர்வால் என நான்கு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தைப் பற்றி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது ``இந்தப் படம் தனக்கான ஜானரைத் தாண்டி சிலவற்றைப் பேசியிருக்கும். இதன் திரைக்கதை பல படிநிலைகளைக் கொண்டது. `மீகாமன் பட ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில், செய்தித்தாள் ஒன்றில் நான் கடந்து வந்த ஒரு விஷயம்தான், இந்தப் படத்தின் கதைக்கான அடித்தளம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மற்றொரு உணர்வு வடிவத்தைப் பற்றி `தடம்' பேசும்" என்றார், மகிழ்.  

 

 

 


[X] Close

[X] Close