சிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன் | kalyani priyadarshan to act with sivakarthikeyan

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

கடைசி தொடர்பு:06:00 (20/02/2019)

சிவகார்த்திகேயன் ஜோடி நானா... மகிழ்ச்சியில் கல்யாணி ப்ரியதர்ஷன்

'இரும்புத்திரை' படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். அவருடைய அடுத்த படம் சிவரகார்த்திகேயனுடன் என சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 

கல்யாணி ப்ரியதர்ஷன்

'இரும்புத்திரை' படத்தைப்போலவே சமூகத்துக்குத் தேவையான கருத்துடன் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்த வேளையில், புதுமுக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.  தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த 'ஹலோ' படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். கமல் நடித்த 'விக்ரம்' படத்தில் அறிமுகமான லிஸ்ஸி லக்‌ஷ்மி மற்றும் பிரமல் இயக்குநர் ப்ரியதர்ஷன் ஜோடியின் மகள் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் 15-வது படமாகத் தயாராகும் இப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் நிறுவனம் மற்றும் 'விஸ்வாசம்' படத்தை விநியோகம் செய்த கே .ஜே. ஆர். ஸ்டூடியோஸ்  நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

சிவகார்த்திகேயன்

இதுகுறித்து கல்யாணி தனது  ட்விட்டரில்,  "சிவகார்த்திகேயன் படத்தில் நானா? இது நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை' எனப் பதிவிட்டுள்ளார்.


[X] Close

[X] Close