``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்! | dhanush released the teaser of CV kumar's gangs of madras movie

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (20/02/2019)

கடைசி தொடர்பு:12:13 (20/02/2019)

``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்"- தனுஷ் வெளியிட்ட `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர்!

சென்னையில் நிகழும் நிழலுலக விஷயங்களைப்பற்றி  நிறைய படங்கள் வந்துள்ளன. அந்தவகையில் 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று ரிலீசானது.

gangs of Madras

இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், ஆடுகளம் நரேன், சாய் பிரியங்கா, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிக்க சி.வி.குமார்  தயாரித்துள்ளார். `மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து மீண்டும் இயக்குநராக 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார்.


கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்

பெண் கேங்ஸ்டர் பற்றிய கதையைக் கொண்ட இப்படத்தில் கார்த்திக் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டஃபுசியா இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பின்னணி இசையமைக்கிறார். ``ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான் " எனத் தொடங்கும்  இப்படத்தின்  டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

 

 


[X] Close

[X] Close