`சூப்பர் டீலக்ஸ்' சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பெறும்! - தயாரிப்பாளர் சஷிகாந்த் | ynotx distribution team to release thiyagarajan kumarraja 'super deluxe'

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (20/02/2019)

கடைசி தொடர்பு:17:06 (20/02/2019)

`சூப்பர் டீலக்ஸ்' சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பெறும்! - தயாரிப்பாளர் சஷிகாந்த்

புதுமையான திரைமொழி, தனித்துவமான கதாபாத்திரங்கள் என ஒரு படத்தை  பற்றிய பதிவுகள் இப்போதுவரை சமூக வலைதளங்களில் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது என்றால் அது `ஆரண்ய காண்டம்' படமாகத்தான் இருக்கும். தன் முதல் படம் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அவர் இயக்க  விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஆச்சர்யப்பட வைக்கும் கூட்டணியுடன் `சூப்பர் டீலக்ஸ்' படம் வெளியாகத் தயாராகவுள்ளது. 

சூப்பர் டீலக்ஸ்

சஷிகாந்த்டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் தியாகராஜன் குமாரராஜா ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அந்த போஸ்டரின் வடிவேலு வெர்ஷன், டீசர் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது ரிலீஸுக்குத் தயாராகவுள்ள இந்தப் படத்தை திரைத்துறையின் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழு வெளியிடவுள்ளது.  

இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறுகையில்,`சூப்பர் டிலக்ஸ்' தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெரும், மேலும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என்றார். YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் AP இண்டர்நெஷ்னல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றினைந்து `YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close