'மேடை நாடகத்தில் நடிக்கணும்ங்கிற ஆசை ரஜினிக்கு நீண்ட காலமாகவே உள்ளது!' - ஒய்.ஜி.மகேந்திரன் | Actor YG Mahendran speaks about Rajini's theater acting interest

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (20/02/2019)

கடைசி தொடர்பு:15:54 (20/02/2019)

'மேடை நாடகத்தில் நடிக்கணும்ங்கிற ஆசை ரஜினிக்கு நீண்ட காலமாகவே உள்ளது!' - ஒய்.ஜி.மகேந்திரன்

`என்னோட நாடகங்கள் ரஜினிக்குப் பிடிக்கும். நாடகங்கள் எல்லாத்துக்கும் ரஜினி வாழ்த்துகள் சொல்லுவார்' என்று சந்தோஷமாகப் பேசினார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். 

ஒய்.ஜி.மகேந்திரன்

``எங்களுடைய UAA நாடகக் குழு பல வருடங்களாக இயங்கிவருகிறது. என்னோட அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று என் தலைமுறையையும் தாண்டி நாடகங்களை அரங்கேற்றிவருகிறது. இன்னும், எங்க நாடகங்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில்  14 முறை நாடகம் நடத்தியிருக்கிறேன். லண்டனில்  நான்கு முறை நாடகம் அரங்கேற்றியிருக்கிறோம். எல்லா கல்ஃப் நாடுகளுக்கும் சென்றிருக்கிறோம். அங்கே இருக்கும் தமிழர்கள், எங்கள் நாடகங்களுக்கு வரவேற்புக் கொடுத்து வருகின்றனர். குடும்பங்களாக வந்து ரசிக்கிறார்கள். அதேபோலத்தான் ரஜினி சாரும். அவர், கடந்த 10 வருடங்களாக என்னோட நாடகங்களை நேரில் வந்து ரசிப்பார். 

ரஜினி

என்னோட `3ஜி' நாடகத்தையும் பார்க்க நேரில் வந்தார். ரஜினி, இதுவரைக்கும் மேடை நாடகங்களில் நடித்தது இல்லை. அவருக்கு ஒரே ஒரு மேடை நாடகத்திலாவது நடிக்கணும்ங்கிற ஆசை நெடுங்காலமாகவே உள்ளது. ஆனா, அதற்கான நேரம்தான் இன்னும் அமையவில்லை. அதுக்குக் காரணம், அவருடைய நேரமின்மைதான். ரொம்ப பிஸியாக அவர் இருக்கிறார். தற்போது இருக்கும் நடிகர்கள், மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும். என்னோட நாடகத்தைத் தற்போது ட்ரெண்டில் இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எல்லோரும் வந்து பார்த்திருக்கிறார்கள்’’ என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close